பக்கம்:நிலைபெற்ற நினைவுகள்-2.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

76 & நிலைபெற்ற நினைவுகள் வருடம் தோறும் சினிமா உலகம் இரண்டு மூன்று சிறப்பு மலர்கள் வெளியிடுவது உண்டு. தீபாவளி மலர், புதுவருட மலர், தமிழ்ப்புத்தாண்டு (சித்திரை) மலர் என்று. அதிகப் பக்கங்களுடன் முக்கிய எழுத்தாளர்களின் கதை கட்டுரைகளுடன் மலர்கள் வெளிவரும். விளம்பரங்களும் அதிகம் இருக்கும். மலர்கள் வெளியிடுவது விளம்பரங்கள் மூலம் பணவருவாய் பெறுவதற்காகத்தான். மலர்களுக்கு விளம்பரங்கள் சேகரிப்பதற்காகச் செட்டியார் சேலம், திருச்சி, சென்னை என்று சுற்றிக் கொண்டேயிருப்பார். அப்போது அங்கே உள்ள எழுத்தாளர்களுடன் தொடர்புகொண்டு விஷயங்கள் பெற்றும் வருவார். அதனால், விளம்பர பலத்துடன் விஷயகனம் கொண்டதாகவும் சினிமா உலகம் மலர்கள் அமைந்திருந்தன. ஆயினும் சிறப்பு மலர்களை விசேஷமான சித்திரங்கள் அழகுபடுத்துவதில்லை. கதை கவிதைகளுக்குப் படங்கள், பொதுவான சினிமா சம்பந்தப்பட்ட படங்கள் இணைக்க வேண்டுமென்றால் பணம் தேவைப்படும். செட்டியார் பத்திரிகையின் வளர்ச்சியில் ஆர்வம் கொண்டிருக்கவில்லை. ஒவ்வொரு தடவையும் ஐந்நூறு பிரதிகள் அச்சிட்டாலே போதும். விற்பனையை அதிகப்படுத்தலாம் என்று அதிகமான பிரதிகள் அச்சிடுவதானால் செலவுகள் மிகும். தாள் விலை, அச்சுக்கூலி, பத்திரிகைகளை அனுப்புகிற செலவு என்று எல்லாமே அதிகப்படியாகிவிடும். விளம்பர வருவாய் இப்போது திருப்திகரமாக இருக்கிறது; பத்திரிகைக்கு நல்ல பெயரும் இருக்கிறது; இந்த நிலையில் செலவுகளைக் கூட்டி நஷ்டத்தை உண்டாக்குவானேன் என்பது அவருடைய எண்ணம். அதை அவர் மாற்றிக் கொள்ள விரும்பவில்லை. சில மாதங்களில், எனது உழைப்பையும் ஈடுபாட்டையும் உணர்ந்து மகிழ்ச்சி அடைந்த செட்டியார், ஆசிரியர் பி.எஸ். செட்டியார் என்று அச்சிடும் இடத்தில் அதை அடுத்து, துணை ஆசிரியர் வல்லிக்கண்ணன் என்று அவராகவே அச்சிடச் செய்தார். பொருளாதார பலம் பெற்றிராது, சிறு அளவில் நடைபெறும் பத்திரிகைகளில் உதவி ஆசிரியர் - துணை ஆசிரியர் என்ற பெயரில் உழைக்கிறவர்களை பத்திரிகை சம்பந்தப்பட்ட அனைத்து வேலைகளையும் கவனித்துக் கொள்கிறவர்களாகத்தான் இருப்பார்கள். இதழுக்குத் தேவையான பல்வேறு விஷயங்களையும் ("மேட்டர்’) எழுதுவது, தபாலில் வரும் விஷயங்களைப் பரிசீலித்துத் தகுந்தவைகளை இணைத்துக் கொள்வது,