பக்கம்:நிலைபெற்ற நினைவுகள்-2.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

78 & நிலைபெற்ற நினைவுகள் இந்த சந்தர்ப்பத்தில் டி.கே.எஸ். சகோதரர்களின் நாடக சபை பாலக்காடு ஊரில் முகாமிட்டு நாடகங்கள் நடத்திக் கொண்டிருந்தது. அந்த ஊருக்குப் போய் நாடக நால்வரைப் பேட்டி காணவும், பத்திரிகைக்கு விளம்பரம் பெற்று வரவும் செட்டியார் என்னையும் எஸ்.பி. கிருஷ்ணனையும் அனுப்பினார் அதன் விளைவாக டி.கே. சண்முகமும் அவருடைய மூத்த சகோதரர்களான டி.கே. சங்கரன், டி.கே. முத்துசாமி மற்றும் இளைய சகோதரர் டி.கே. பகவதி ஆகியோர் எனக்கு அறிமுகமாயினர். பின்னர் நல்ல நண்பர்களானார்கள். கம்பெனி நடிகர்களாக டி.வி. நாராயணசாமி, எஸ்.வி. சுப்பையா முதலியோரும் பிரியமுடன் பேசிப் பழகினார்கள். கடிதத் தொடர்பு கொண்டு நட்பை வளர்த்தார்கள். கம்பெனியில் விருந்தினர்களாக இரண்டு நாள்கள் தங்கினோம். நாடகங்கள் பார்த்தோம். நான் திருநெல்வேலியிலிருந்து அவர்களுக்கு எழுதிய கடிதத்தை டி.கே. சண்முகம் நினைவுகூர்ந்தார். நீங்கள் கம்பெனியில் தங்கி, நேரடி அனுபவம் பெற்று, நாடகங்கள் எழுத ஆசைப்பட்டது நல்ல விருப்பம்தான். ஆனால் நாங்கள் வழக்கமான நாடகங்களையே மேடை ஏற்றிக் கொண்டிருக்கிறோம். வளர்கிற திறமையுள்ள ஒரு எழுத்தாளரை நம்ப கம்பெனியில் சேர்த்துக் கொண்டு என்ன வேலை கொடுக்க முடியும் என்று பெரிய அண்ணாச்சி (டி.கே. சங்கரன்) சொன்னாங்க அதனாலே தான் நான் உங்களுக்குக் கடிதம் எழுதினேன் என்று அவர் தன்னிலை விளக்கம் தந்தார். நாடகக் கலைஞர் டி.கே. சண்முகம் சிறந்த நடிகர். நன்கு பாடக்கூடியவர். நல்ல இலக்கிய ரசிகர். கட்டுரைகள் எழுதுவதிலும் சடுபாடு கொண்டிருந்தார். ‘மணிக்கொடி பத்திரிகை, பாரதிதாசனின் சுப்பிரமணிய பாரதி கவிதா மண்டலம், சக்தி, கலாமோகினி போன்ற ஆழ்ந்த இலக்கியப் பத்திரிகைகளிலும், ஆனந்தவிகடன், கல்கி முதலிய பத்திரிகைகளிலும் ஆர்வம் கொண்டு, படிப்பதில் விசேஷ நாட்டமும் பெற்று, தனது ரசனையை வளர்த்து வந்தார். வளர்ந்து வந்த திராவிட இயக்கக் கொள்கைகளிலும், அவர்களின் எழுத்துக்களிலும் அக்கறை காட்டி வந்தார். கம்யூனிஸ்ட் கட்சி இலக்கியங்களிலும் கவனம் செலுத்திக் கொண்டிருந்தார். நாட்டுப்பற்றும் மொழிப்பற்றும் மனிதநேயமும் நல்ல உள்ளமும் பெற்றிருந்த கலைஞர் அவர். "சினிமா உலகம் பணிகளைக் கவனித்து வந்ததுடன், நான் என் விருப்பம்போல் கதைகள் கட்டுரைகள் கடிதங்கள் எழுதுவதற்கும்