பக்கம்:நிலைபெற்ற நினைவுகள்-2.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

80 * நிலைபெற்ற நினைவுகள் சிறிது காலத்திலேயே அவை ஒய்ந்தும் போயின. குமரி மலர் நீண்டகாலம் வெற்றிகரமாக வெளிவந்து, நிலையான பெயர் பெற்றுத் திகழ்ந்தது. இவ்வாறு காலம் போய்க்கொண்டிருக்கையில் என்னுள் அதிருப்தி தோன்றியது. மனஉறுத்தலாக அது வளர்ந்தது. நான் இங்கே வந்து ஆறு மாதங்கள் ஆகின்றன. தடம் விழுந்த நொடியில் வண்டி தள்ளாடி நகர்வதுபோல் தான் இருந்தது வாழ்க்கை முன்னேற்றத்துக்கும் வளர்ச்சிக்கும் வாய்ப்பே இல்லை என்று நிச்சயமாகப்பட்டது. எழுத்துலகில் மேலும் வளர்வதற்காக நான் இங்கிருந்து போக வேண்டியதுதான் என்றது மனம், செட்டியாரிடம் இதை நேரடியாகச் சொல்லத் தயக்கம். அவர் பரிவோடும் பாசத்தோடும் பழகி வந்தார். குடும்பத்தாரும் என்னிடம் அளவிலா அன்பு காட்டினார்கள். இருப்பினும் எனது எதிர்காலத்தைக் கருத்தில்கொண்டு நான் வெளியேற வேண்டியது அவசியம் என்று மனக்குரல் திடமாகக் கூறிவந்தது. எனவே எனது ஆசைகளையும், திருப்தி தராத நிலையையும் விவரித்து ஒரு நீண்ட கடிதம் எழுதினேன். சமயம் பார்த்து அதை செட்டியாரிடம் அளித்தேன். அதைப் படித்த அவர் யோசனையில் ஆழ்ந்தார். சாயங்காலம் அமைதியாகப் பேசலாம் என்று சொல்லிவிட்டு வழக்கமான அலுவல்களைக் கவனிக்க வெளியே போனார். அன்று மாலை என்னை அழைத்துக் கொண்டு செட்டியார் வெளியே புறப்பட்டார். வழியில் ஒர் ஒட்டலில் சிற்றுண்டி சாப்பிட்டோம். ஊரில் ஒர் ஒரமாக இருந்த வாலாங்குளம் என்கிற பெரிய குளத்தின் நீண்ட அகலமாக கரைக்கு இட்டுச் சென்றார். என்னுடைய எண்ணங்களையும் விருப்பத்தையும் மனம் திறந்து எழுதித் தெரிவித்ததற்காகப் பாராட்டினார். இலக்கியப் பத்திரிகை ஒன்றும் நடத்தும் எண்ணம் தனக்கு நெடுநாட்களாக உண்டு என்றார். கவிஞர் பாரதிதாசன் தன்னோடிருந்து சினிமா உலகத்துக்குத் துணை புரிந்த நாள்களில், அவருக்காக 'நிலா என்ற பெயரில் ஒர் இதழ் தொடங்க முன்னேற்பாடுகள் செய்ததையும், அத்திட்டம் நிறைவேறாமல் போனதையும் விவரித்தார். 'நிலாவுக்காகச் செய்த பிளாக்குகள் எல்லாம் இருக்கின்றன. இப்போது குமரி மலர் மாதிரி நிலா என்று மாதம் ஒரு புத்தகம் கொண்டு வருவோம். அத்துடன் உங்கள் எழுத்துக்களைப் புத்தகமாக வெளியிடலாம். அதற்கான விளம்பரத்தை சினிமா உலகம் வருகிற இதழிலேயே அச்சிடலாம் என்று கூறினார்.