பக்கம்:நிலைபெற்ற நினைவுகள்-2.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வல்லிக்கண்ணன் & 81 வீடு திரும்பியதும் செட்டியார், பழைய பிளாக்குக் குவியல்களில் தேடி எடுத்து நிலா சம்பந்தமான பிளாக்குகளைச் சேகரித்தார். அவற்றை என்னிடம் காட்டினார். 'பொற்காலப் பிரசுரலாயம் என்ற தலைப்பில் வெளிவர இருக்கும் புதிய புதிய புத்தகங்கள் என்று சில நூல்களின் பெயர்களை எழுதினார். பி.எஸ். செட்டியார் எழுதிய ராஜா தேசிங்கு நாடகம், மற்றும் இரண்டு நூல்கள், இவற்றுடன் இளங்கோவன் கதைகள், வல்லிக் கண்ணன் கதைகள் என்பவற்றையும் சேர்த்தார். அந்த விளம்பரம் சினிமா உலகம் இதழில் வெளிவந்தது. இளங்கோவன் (Lø.65. தணிகாசலம்) எழுத்தாளர் புதுமைப்பித்தனுடன் 'தினமணி'யில் பணியாற்றியவர். நல்ல சிறுகதைகள் எழுதியிருந்தார். ஆஸ்கார் ஒயில்டு எழுத்துக்களில் ஆழ்ந்த ஈடுபாடு கொண்ட இலக்கியவாதி. அவருடைய கதைகளிலும் கட்டுரைகளிலும் ஒயில்டு எழுத்துக்களின் தத்துவங்களின் சாயை தென்படும். 'தினமணி 1937ஆம் வருட ஆண்டுமலரில் இளங்கோவன் சாவே வா’ என்றொரு அருமையான கட்டுரை எழுதியிருந்தார். ஆழ்ந்த சிந்தனைகளைக் கொண்டிருந்தது அது. அப்புறம் இளங்கோவன் சினிமாத் துறையில் ஈடுபட்டு, திரைப்பட வசனத்தில் புதுமைகளும் இலக்கிய நயமும் சேர்த்து, புகழ்பெற்றார். பி.எஸ். செட்டியாருக்கு நல்ல நண்பர். இளங்கோவனின் எழுத்துக்கள் அதுவரை புத்தகமாக வெளிவந்திருக்கவில்லை. அவற்றை வெளியிட வேண்டும் என்ற ஆசை செட்டியாருக்கு இருந்தது. இளங்கோவனின் தயவும் உதவியும் அவருக்குத் தேவைப்பட்டன. தனது எழுத்துக்களை நூல் வடிவில் வெளியிடுவதற்கான அனுமதியை இளங்கோவன் செட்டியாருக்கு வழங்கினார். மனிதர்களது ஆசைகள் கனவுகள் எல்லாம் செயல்வடிவம் பெற்றுவிடக் கூடும் என்ற சாத்தியப்பாடு வாழ்க்கையில் இருக்குமானால், எத்தனை எத்தனையோ அற்புதங்களும் மகத்தான சாதனைகளும் விளைந்து கொண்டே இருக்குமே! எண்ணியவை அனைத்தும் அல்லது அவற்றில் பெரும் பகுதியேனும் எங்கே நிறைவேறுகின்றன? சினிமா உலகம் செட்டியாரின் ஆசைகள் பலவும் செயல் மலர்ச்சி பெற முடியாத நிலைமையே நீடித்தது. சிறிதளவாவது செயலுருவம் பெறுவதற்குக் கூட அவரது பொருளாதாரம் இடம் கொடுக்கவில்லை.