பக்கம்:நிலைபெற்ற நினைவுகள்-2.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வல்லிக்கண்ணன் : 83 நல்ல வேளை சென்னை போகிற ரயில்வண்டி முதலில் புறப்பட்டது. இனி யார் வந்து தேடினாலும் கவலையில்லை என்ԱԶi மனம் நிம்மதி அடைந்தது. திருநெல்வேலியில் இருந்து நான் எழுதுவதுபோல், என் நிலைமையையும் பிரயாணத்தையும் விரிவாகக் கூறும் ஒரு கடிதம் செட்டியாருக்கு எழுதி, ஏற்கனவே அதை என் அண்ணாவுக்கு அனுப்பியிருந்தேன். மூன்று நாள்கள் ஆனபிறகு அதைச் செட்டியாருக்குத் தபாவில் அனுப்பி வைக்கும்படி கேட்டிருந்தேன். அப்படியே செய்யப்பட்டது. கோயம்புத்துரிலிருந்து நான் கிளம்பிய இரவில் எஸ். கிருஷ்ணன் என்னை வழி அனுப்புவதற்காக ரயில் நிலையத்துக்கு வருவதாக இருந்தார். ஆனால் அவர் தூங்கி விட்டார். திடீரென விழித்துக்கொண்டு, நேரமாகிவிட்டதே என்று உணர்ந்தார். நான் ஏற்கெனவே போய்விட்டேன் என்று கண்டதும் வேகம் வேகமாக நடந்து ரயிலடிக்கு வந்தார். திருநெல்வேலி போகிற ரயில் நின்றது. அவர் ஒவ்வொரு பெட்டியினுள்ளும் சன்னல் வழியாக எட்டிப் பார்த்து வல்லிக்கண்ணன் என்று கூவியபடி பிளாட்பாரத்தில் அங்குமிங்குமாக நடந்து தேடியுள்ளார். ரயில் கிளம்பிவிட்டது. சரி, வண்டியில் கூட்டத்துக்கு நடுவிலே சிக்கியிருப்பார் என்று எண்ணிக் கொண்டு வீடு திரும்பினார். பின்னர் ஒரு சமயம் அவரைச் சந்திக்க நேரிட்டபோது கிருஷ்ணன் இதை என்னிடம் தெரிவித்தார். மேலும் அவர் தமாஷாகக் குறிப்பிட்டார். அன்றைக்கு ராத்திரி ரயிலை ஒட்டி பிளாட்பாரத்திலே காப்பி - காப்பி வடை முறுக்கு என்று கூவி விற்கிவர்கள் மாதிரி நான் வல்லிக்கண்ணன் - வல்லிக்கண்ணன் என்று சத்தமிட்டபடி அங்கும் இங்குமாக அலைந்தேனா! இவன் என்னடா புதுசா என்னமோ விற்கிறானே என்று மற்றவங்க எண்ணியிருப்பாங்க! என்றார். இதைக் கூறிவிட்டு உரக்கச் சிரித்தார் நண்பர். கோயம்புத்துரரில் நான் ஒன்பது மாதங்கள் வசித்தேன். வாழ்க்கை பற்றியும் மனிதர்கள் குறித்தும் எனது அனுபவ ஞானம் ஒரு சிறிது வளர்வதற்கு அந்தக் காலகட்டம் உதவியிருந்தது. என் அண்ணா கோமதிநாயகம் ஒரு சந்தர்ப்பத்தில் கோவை வந்தார். அங்கே அவருக்கு ஒரு வேலை கிடைக்கும் என்று அன்பர் தெரிவித்திருந்தார். வேலை இருந்தது. ஆனால் அந்த வேலையும், வேலை செய்ய வேண்டிய இடமும், கடும் குளிரில் அதிகாலையிலேயே எழுந்து வேலை இடத்துக்குப் போக வேண்டும்