பக்கம்:நிலைபெற்ற நினைவுகள்-2.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வல்லிக்கண்ணன் ஆ 85 நாடகக் கலைஞர் டி.கே. சண்முகத்தின் நாடகக் கம்பெனியின் முதலாளித்துவப் போக்குகள் தங்களுக்குப் பிடிக்கவில்லை என்J2і, கம்பெனி நடிகர்களான டி.வி. நாராயணசாமி, எஸ்.வி. சுப்பையா, மற்றும் ஒரு சிலர் உரிமைக்குரல் எழுப்பினார்கள். அவர்கள் கம்பெனியை விட்டு வெளியேற நேரிட்டது. நண்பர்கள் நாராயணசாமியும், எஸ்.வி. சுப்பையாவும் கோயம்புத்துாருக்கு வந்து, சினிமா உலகம் செட்டியாரைக் கண்டு பேசினார்கள். என்னுடனும் பேசி மகிழ்ந்தார்கள். டி.வி. நாராயணசாமி திராவிட இயக்கக் கொள்கைகளில் மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்தார். அதனால், அந்த இயக்கத்தில் சேர்ந்து பணிபுரிய விரும்புவதாகச் சொல்லி அவர் சென்னைக்குப் போனார். எஸ்.வி. சுப்பையா சினிமாத் துறையில் நடிகராக முன்னேற ஆசைப்பட்டார். அதற்கு பி.எஸ். செட்டியாரின் உதவியை நாடினார். திரைஉலகில் ஒளி மிகுந்த நட்சத்திரமாகப் பிரகாசித்து வந்த எம்.கே. தியாகராஜ பாகவதர், அந்தச் சமயத்தில், கோயம்புத்துாரில் தங்கியிருந்தார். ஏதோ படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்தது. அவரைப் பார்த்து சிபாரிசு செய்ய முடியுமா என்று சுப்பையா, செட் டியாரைக் கேட்டார். அவரும் ஆசாரி குலத்தைச் சேர்ந்தவர். நானும் செங்கோட்டை ஊரில் ஆசாரி இனத்தைச் சேர்ந்தவன் தான். எனக்கும் நன்றாகப் பாட வரும் என்று சுப்பையா தெரிவித்தார். செட்டியார் சிரித்தார். உங்களுக்கு எம்.கே.டி. பாகவதரின் குணம் தெரியாது. பொதுவாக மற்றவர்களுக்கு அவருடைய இயல்புகள் தெரியாதுதான். முதலில், நடிகன் என்று சொல்லிக் கொண்டு, அவரைப் போலவே தலைமுடியை தோள்வரை வளரும்படி தொங்க விட்டுக் கொண்டிருப்பவர்களை அவருக்கு அறவே பிடிக்காது. அப்படி வருகிறவர்களைக் கண்டாலே முகம் சுளிப்பார். இரண்டாவது, அவரும் ஆசாரி - நானும் ஆசாரி என்ற குலமுறை பேசிக் கொண்டு அணுகுகிறவர்களையும் அவருக்குப் பிடிக்காது. அப்படி சொல்லியபடி உதவி கேட்டு வருகிறவர்களை அவர் வெறுப்பார். ஒவ்வொருவரும் அவரவர் திறமையினாலும் உழைப்பினாலும் முன்னுக்கு வரவேண்டும் என்று நினைப்பவர் அவர். அதை வெளிப்படையாகவே சொல்லுவார் என்று செட்டியார் கூறினார்.