பக்கம்:நிலைபெற்ற நினைவுகள்-2.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

85 % நிலைபெற்ற நினைவுகள் இருந்தாலும் பார்ப்போம், சமயம் வரும்போது நான் பாகவதரிடம் அழைத்துச் சென்று உங்களை அறிமுகம் செய்கிறேன். வேறு இடங்களிலும் முயற்சி பண்ணலாம் என்றும் பி.எஸ். செட்டியார் சொன்னார். கொஞ்ச நாள் கோயம்புத்துரிலேயே இருங்கள், முயற்சி பண்ணலாம் என்றும் தெரிவித்தார். நடிகர் சுப்பையா கலை உள்ளமும் நடிப்புத் திறமையும் பெற்றிருந்தார். நடிகனாக முன்னேறி, நடிப்புக் கலையில் பெயர் சொல்லும்படி விளங்க வேண்டும் என்ற துடிப்பு அவருக்கு இருந்தது. ஒருநாள் அவர் தனியாகவே பாகவதரைப் பார்த்துப் பேசுவதற்காகச் சென்றார். பாகவதர் சரியாக வரவேற்கவில்லை என்றும், நல்லபடியாகப் பேசவில்லை என்றும் என்னிடமும் எஸ்.பி. கிருஷ்ணனிடமும் அவர் பின்னர் கூறினார். தியாகராஜ பாகவதர் அப்போது ராஜபோக வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருந்தார். ஆதியில் திருச்சியில் தெருவில் அவர் பாடித் திரிந்தவர். நாடகக் கம்பெனியில் சேர்ந்து, பாட்டுத் திறத்தால் கவனிப்புப் பெற்றார். சினிமா வாய்ப்பு கிட்டியது. படிப்படியாக முன்னேறி, வெகுவேகமாக புகழ் வானில் உயர்ந்து விட்டார். பெயரும் புகழும் செல்வமும் அதிகரி: , அதிகரிக்க அவர் ஆளே மாறிப்போனார் என்று அவரை அறிந்திருந்தவர்கள் பேசிக் கொண்டார்கள். அவர் கோயம்புத்துரில் ஆடம்பர வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருந்தது பற்றிப் பலரும் வியப்புடன் பேசினர். சினிமா உலகம் செட்டியாரும் அவ்வப்போது பாகவதர் பெருமைகளைச் சொல்வது உண்டு. எஸ்.பி. கிருஷ்ணனும் சொன்னார். பாகவதர் நடிக்கும் படத்தைத் தயாரித்து வந்த கம்பெனி அவருக்கென்று வசதிகள் நிறைந்த தனிவீடு கொடுத்திருந்தது. நடுவில் கம்பெனிக்கான வீடு. அதன் ஒரு புறத்தில் பாகவதர் தங்கியிருந்த வீடு. மறுபக்கம், அவரைக் காதலித்து, அவரைத் தேடிவந்த ஒரு அழகி வசித்த வீடு. - பாகவதரின் வசீகரத் தோற்றம், பாடும் திறமை, இனிய குரல் இவற்றால் ஈர்க்கப்பட்டு. அநேக பெண்கள் அவரைத் தேடி வந்தார்கள். அப்படி வந்த ஒரு பிராமணத்தியை அவர் தன்னுடன் சேர்த்துக்கொண்டு, அவளுக்கெனத் தனியாக வீடு ஏற்பாடு செய்திருந்தார் என்று சொல்லப்பட்டது. -