பக்கம்:நிலைபெற்ற நினைவுகள்-2.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வல்லிக்கண்ணன் & 87 பாகவதர் கந்தர்வன் மாதிரி இருப்பதாகச் சொன்னார்கள். கந்தர்வனை யார் பார்த்தார்கள்? அழகில் சிறந்த ஒரு உருவம் கந்தர்வம் என்று காலம்காலமாகக் கற்பிக்கப்பட்டு வருகிறது. தியாகராஜ பாகவதர் ராஜா மாதிரி வாழ்கிறார். அவர் சாப்பிடுவது தங்கத் தட்டிலே தான். சாப்பிட்டானதும் அவரே எழுந்து போய் தன் கையைக் கழுவிக் கொள்ள மாட்டார். இருந்தபடியே வலது கையை நீட்டுவார். தயாராகக் காத்து நிற்கும் ஒரு ஆள் விரைந்து வந்து ஒரு வெள்ளிப் பாத்திரத்தை கைக்குக் கீழே பிடித்து நிற்பான். இன்னொரு ஆள் தண்ணிரைச் சிறிது சிறிதாக ஊற்றி பாகவதரின் சாப்பிட்ட கையை நன்கு கழுவி விடுவான். அவ்வளவு பவிசு அவருக்கு இப்படி சினிமா உலகம்’ பத்திரிகை ஆசிரியர் செட்டியார் ஒரு சமயம் விவரித்தார். பாகவதர் கையில் விலை உயர்ந்த வாட்ச் கட்டியிருக்கிறார். அதற்கான செயின் தங்கத்தினால் ஆனதாக இருக்கும் என்று தானே நினைக்கிறீர்கள்? இல்லை. விலை உயர்ந்த வைரக் கற்களாலான வாட்ச் செயினை பாகவதர் கட்டியிருக்கிறார். அவர் கையை அப்படியும் இப்படியும் ஆட்டி அசைக்கிறபோது வைரங்கள் டாலடிக்கின்றன. விளக்கு வெளிச்சம் இருக்கிற போது கேட்கவே வேண்டாம். கண்களைக் கூசச் செய்கிறது வைரஒளி பிரகாசிக்கிற வைரங்களினூடே இருக்கிற வாட்ச்சில் மணி பார்க்க முடியாது! ஆனால் பாகவதர் மணி பார்ப்பதற்காகவா வாட்ச் கட்டியிருக்கிறார்? பகட்டுக்கும் படாடோபமாகவும் தான் அவர் வாட்ச் அணிந்திருக்கிறார். இதுவும் செட்டியார் சொன்னது தான். ஆனால் ஏனோ இவற்றை எல்லாம் பத்திரிகையில் சுவையான செய்திகளாக வெளியிடலாமே என்ற நினைப்பு அவருக்குத் தோன்றவில்லை. அந்நாளைய சினிமாப் பத்திரிகையாளர் எவருக்குமே தோன்றவில்லை. காலப்போக்கில், சினிமா இதழ்களின் போக்கு எவ்வளவோ மாறிவிட்து. கிசுகிசு, வம்புகள், வதந்திகள், அக்கப்போர் சமாச்சாரங்கள் என்று எவ்வளவோ என்ன என்னவெல்லாமோ எழுதி மகிழத் தொடங்கிவிட்டன. அவற்றை வாசகர்கள் விரும்பிப் படிக்கிறார்கள் என்று தெரிந்துகொண்ட இதர வணிக நோக்கு அதிக விநியோகமுள்ள வாரப் பத்திரிகைகளும் சினிமா நடிகையர், நடிகர்கள் பற்றி விசேஷ செய்திகளை வாரி வழங்குகின்றன. எம்.கே.டி பாகவதர் ஆரம்ப கால ஏழ்மை நிலையை மறந்து, பகட்டும் படாடோபமும் ஆடம்பரமும் ஆணவமும் கொண்டு