பக்கம்:நிலைபெற்ற நினைவுகள்-2.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

92 % நிலைபெற்ற நினைவுகள் நடுத்தெருவில் கொண்டுவந்து சேர்த்தார். 'நவசக்தி அலுவலகம் இருந்த வீட்டைக் கண்டு அதன் முன் வண்டியை நிறுத்தினார். இரண்டு ரூபாயைப் பெற்றுக் கொண்டு திருப்தியோடு சென்றார். அது வசதியான தனி வீடு நவசக்தி அச்சகம் அங்கே இருந்தது. அச்சகத்துக்கு உரிய பலவிதமான சாமான்களும், ஒரு டிரெடில் மிஷினும் இருந்தன. ஆள்கள் யாரும் அங்கு வசிக்கவில்லை. சக்திதாசன் சாலைத் தெருவில் ஒரு வீட்டில் வசிப்பதாகத் தெரியவந்தது. ஆனால் நான் வந்து சேர்ந்த நாளில், சக்திதாசன் சுப்பிரமணியன் சென்னையில் இல்லை, நவசக்தியின் வளர்ச்சிக்காக நிதிவசூல் செய்யும் நோக்கத்துடன் அவர் இலங்கை போயிருந்தார். அந்த வீட்டில் அப்போது கிராம ஊழியன் பத்திரிகையின் ஆசிரியரான கவிஞர் திருலோக சீதாராம் தங்கியிருந்தார். அவர் தான் என்னை இன்முகத்துடன் வரவேற்றார். 'கிராம ஊழியன்’ திருச்சி நகரிலிருந்து இருபத்தெட்டு மைல்களுக்கு அப்பாலிருந்த துறையூர் என்ற சிற்றுாரிலிருந்து வெளிவந்தது. ஆரம்பத்தில் சமூக அரசியல் பத்திரிகையாக நடந்து வந்த கிராம ஊழியன் சிறிது காலமாக மறுமலர்ச்சி இலக்கிய மாதம் இருமுறை இதழாக, சிறு அளவுப் புத்தக (கிரெளன் சைஸ்) வடிவத்தில் வந்து கொண்டிருந்தது. திருலோக சீதாராம் நிர்வாக ஆசிரியர் என்றும் கு.ப. ராஜகோபாலன் ஆசிரியர் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது. (முதலில் ஆறு மாதி காலம் கு.ப.ரா.கெளரவ ஆசிரியர் ஆக இருந்தார்) அ.வெ.ர. கிருஷ்ணசாமி ரெட்டியார் பதிப்பாளர். பத்திரிகை, கிராம ஊழியன் பிரஸ் விமிட்டெட் என்ற நிறுவனத்தின் சார்பில் வெளியிடப்பட்டது. ரெட்டியார் தான் லிமிட்டெட் கம்பெனியின் செயலாளர். கிராம ஊழியன் பொங்கல்மலர் வெளியிடத் திட்டமிட்டிருந்தது. அதற்கான வேலைகள் நடந்து கொண்டிருந்தன. மலருக்கு விளம்பரங்கள் சேகரிக்கவும், சென்னை எழுத்தாளர்களிடமிருந்து கதைகள், கட்டுரைகள் கேட்டுப் பெறவும் கு.ப.ராஜகோபலனும் திருலோக சீதாராமும் வந்து, நவசக்தி அலுவலகத்தில் தங்கியிருந்தார்கள். பதினைந்து நாள்களுக்கு மேலாகி விட்டதால் கு.ப.ரா கும்பகோணம் போய் விட்டார். திருலோகம் மட்டும் சென்னையில் இருந்தார். இவ்விவரங்களை சீதாராம் என்னிடம் தெரிவித்தார். என் எழுத்துக்கள் கிராம ஊழியனில் வந்திருந்தன. எனினும் நாங்கள்