பக்கம்:நிலைபெற்ற நினைவுகள்-2.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வல்லிக்கண்ணன் x 93 இதுவரை சந்தித்ததில்லை. இப்போது தான் நேரில் அறிமுகமானோம். திருலோகம் மந்தஹாசன்” என்ற பெயரில் கவிதைகள் எழுதிவந்தார். திருலோக சீதாராம் பல வருடங்களுக்கு முன்பு விழுப்புரத்தில் உபாத்தியாயர் வேலை பார்த்துக் கொண்டிருந்தார். அங்கே இராம. சடகோபன் என்பவர் "தியாகி’ என்ற இதழை நடத்திவந்தார்.மிக எளிய முறையில் நடந்த சிற்றிதழ் அது திருலோகம் அதில் உதவி ஆசிரியராகப் பணியாற்றினார். நாமே ஏன் ஒரு பத்திரிகை நடத்தக்கூடாது என்ற நினைப்பு அவருக்கு எழுந்தது. ஆற்காடு தூதன்' (ஆற்காட் ஹெரால்ட்) எனும் பெயரில் அவர் ஒரு பத்திரிகை நடத்தினார். அது வெகுகாலம் வளரவில்லை. பிறகு இலக்கிய நோக்குடன் 'பால பாரதம்’ என்ற இதழைத் தொடங்கினார். மகாகவி பாரதியார், வள்ளலார் இராமலிங்கம் ஆகியோர் பாடல்களில் மிகுந்த ஈடுபாடு கொண்டவர் அவர் தனி ரகமான ஒரு குரலில் அவர் பாரதியார் பாடல்களைப் பாடுவது வழக்கம். வள்ளலார் பாடல்களையும் பாடுவார். சொற்பொழிவும் ஆற்றுவார். அதனால் அவருக்கு விழுப்புரம் வட்டாரத்தில் நல்ல பெயர் கிட்டியிருந்தது. - திருலோக சீதாராமின் மனைவி ஊர் துறையூர். எனவே அவர் அடிக்கடி அந்த ஊருக்குப் போய் வருவார். அங்கும் சுற்று வட்டார கிராமங்களிலும் பாரதியார் பாடல்களைப் பாடியும், வள்ளலார் பற்றிச் சொற்பொழிவுகள் நிகழ்த்தியும் செல்வம் பெற்றிருந்தார். துறையூருக்கு அருகிலிருந்த ஒரு ஊரில் பணக்காரராக வசதிகளோடு வாழ்ந்த கிருஷ்ணசாமி ரெட்டியார் சீதாராமின் நண்பரானார். அவருக்கும் பாரதி பாடல்களில் மிகுந்த ஈடுபாடு இருந்தது. அந்நாள்களில் துறையூரில் கிராம ஊழியன் என்ற பெயரில் சமூகம் மற்றும் அரசியல் நோக்கு கொண்ட காங்கிரஸ் பத்திரிகை வார இதழாக வெளிவந்து கொண்டிருந்தது. பூரணம் பிள்ளை என்ற காங்கிரஸ்காரர். அதை நடத்திவந்தார். பல பிரமுகர்களின் ஆதரவு அதற்கு இருந்தது. அந்தப் பத்திரிகை தோன்றி வளர்ந்ததற்கு முக்கியமான ஒரு காரணம் இருந்தது. அக்காலகட்டத்தில் திருச்சியிலிருந்து நகரது தன் பத்திரிகை வாரம் தோறும் வெளியாகி பரபரப்பு ஏற்படுத்திக் கொண்டிருந்தது. அது காங்கிரசுக்கு எதிர்க்கட்சியான நீதித் கட்சியை (ஜஸ்டிஸ் பார்ட்டி) ஆதரித்தது. அதன் ஆசிரியர் ரெ. திருமலைசாமி சிறப்பான எழுத்தாற்றல் பெற்றிருந்தார்.