பக்கம்:நிலைபெற்ற நினைவுகள்-2.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

94 & நிலைபெற்ற நினைவுகள் விறுவிறுப்பான நடையில் காரசாரமான கட்டுரைகளை அவர் எழுதினார். காங்கிரஸ் கட்சியையும், அந்த வட்டாரத்து எம்.எல்.ஏ, மற்றும் காங்கிரஸ் பிரமுகர்களையும் கடுமையாகத் தாக்கி எழுதிக் கொண்டிருந்தார். 'பேனா நர்த்தனம்’ என்ற தலைப்பில் அவர் எழுதிய கட்டுரைகள் சூடும் சுவையும் வேகமும் விறுவிறுப்பும் நிறைந்தவை. வாசகர்களின் கவனத்தை வெகுவாகக் கவர்ந்த பகுதி அது. 'நகர தூதன் தாக்குதல்களுக்கு எதிர்த்தாக்குதல் கொடுக்க வேண்டும், திருமலைசாமியின் சாடல்களுக்கு பதிலடி தரவேண்டும் என்று திருச்சி மாவட்ட காங்கிரஸ்காரர்கள் கருதினார்கள். எனவே ‘கிராம ஊழியன்’ என்ற பெயரில் ஒரு பத்திரிகையை துறையூரில் ஆரம்பித்து நடத்தினார்கள். சிறு அச்சகம் வைத்திருந்த பூரணம்பிள்ளை பொறுப்பில் அது வளர்ந்தது. ஆசிரியர் பூரணம் பிள்ளை இறந்துபோனார். பத்திரிகையை எப்படி நடத்துவது என்ற நெருக்கடி எழுந்தது. திருலோக சீதாராமின் உதவியை நிர்வாகிகள் வேண்டினார்கள். விழுப்புரத்தில் சொந்தமாகப் பத்திரிகைகள் நடத்தி வெற்றிபெறாமல் போயிருந்த சீதாராம் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ள சில பிரமுகர்களைச் சேர்த்துக் கொண்டு லிமிட்டெட் நிறுவனம் ஒன்றை உருவாக்கினார்கள். அது அச்சாபீசை பெரிய அளவில் தடத்த முனைந்தது. சிலிண்டர் மிஷின், டிரெடில் மிஷின், மற்றும் அச்சகத்துக்குத் தேவையான சாமான்கள் பலவும் சேகரிக்கப்பட்டன. ஆட்கள் பலர் வேலைக்கு அமர்த்தப்பட்டார்கள். கிராம ஊழியன் பிரஸ்லிமிட்டெட் கிராம ஊழியன் பத்திரிகையையும் வெளியிட்டது. திருலோக சீதாராம் அதன் ஆசிரியரானார். அவர் துறையூருக்கே வந்துவிட்டார். அரசியல் வார இதழாக கிராம ஊழியன் வெற்றிகரமாக வளர முடியவில்லை. நஷ்டத்தில் தள்ளாடிக் கொண்டிருந்தது. இச் சமயத்தில், திருச்சியில் வி.ரா. ராஜகோபாலன் நடத்திக்கொண்டிருந்த மறுமலர்ச்சி இலக்கிய இதழான 'கலாமோகினி எழுத்தாளர் வட்டாரத்திலும் பத்திரிகை உலகிலும் நல்ல கவனிப்பைப் பெற்று வந்தது. நாமும் இது மாதிரி இலக்கியப் பத்திரிகை ஒன்றை நடத்தலாமே என்ற எண்ணமும், நடத்த வேண்டும் எனும் ஆசையும் திருலோகம், அ.வெ.ர.கி. இருவருக்கும் ஏற்பட்டது. பத்திரிகைக் காகிதக் கட்டுப்பாடு அமுலில் இருந்த காலம். புதிய பத்திரிகைகள் தொடங்குவதற்கு அரசு அனுமதி