பக்கம்:நீகிரோ மாமா-மொழிபெயர்ப்பு.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

முழுதும் மாறி மாறி அடித்துக்கொண்டே யிருந்தான்! 'இப்பொழுதும் நீ அடிக்க முடியாது என்ரு சொல்லு வாய்?" என்று அவன் ஊளையிட்டான். டாம், முகத்தில் வழிந்த இரத்தத்தை ஒரு கையால் துடைத்துக்கொண்டே, "ஆம், யசமான் ! கான் இரவும் பகலும் வேலை செய்யக் காத்திருக் கிறேன். எனக்கு உயிருள்ளவரை, மூச்சுள்ளவரை, உழைக்கத் தயாராயிருக்கிறேன். ஆனல் நீங்கள் இப்பொழுது சொல்லும் வேலையைச் செய்வது நியாய மில்லை; யசமான், இதை நான் செய்ய மாட்டேன்! செய்யவே மாட்டேன்' என்று கடறினன். டாம் அடக்க ஒடுக்கத்துடன் அமைதியாகவே பேசினன். அவனுடைய குரல் இனிமையாகவும், மரியாதையுள்ளதாகவும் இருந்தது. அவன் உறுதி யாக உள்ளத்திலுள்ளதைப்பேசியபோதிலும், லெகிரி அவன் கோழை என்றும், அவனை எளிதில் அடக்கி விடலாம் என்றும் கருதினன். ஆயினும் அங்கிருந்த அடிமைகள் அவன் 'மாட்டேன்' என்று இறுதியாக உறுதியுடன் கூறியதை நன்கு புரிந்துகொண்டனர். மேல்விளைவு என்னவாகுமோ என்று அவர்கள் ஆச்சரி யத்துடன் கவனித்துக் காத்துக் கொண்டிருந்தனர். அனைவரும் மூச்சுக்ககூட விடவில்லை. லூஸி கைகளைப் பிசைந்துகொண்டு, ஐயோ, கடவுளே! என்று முன கிக்கொண்டு, அயர்ந்து கிடந்தாள். லெகிரி ஒரு நிமிடம் வியப்போடு திகைத்து நின் ருன். பிறகுதான் வாய் திறந்து பேசலாளுன் : 'என்னடா, கறுப்பு நாயே! பெரிய ஞானிபோலப் பேசுகிருய்? நான் சொல்வதைச் செய்வது நியாயம் இல்லை என்ரு பேசுகிருய்? நியாயம் எது என்று

9 &

93