பக்கம்:நீகிரோ மாமா-மொழிபெயர்ப்பு.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

எழுந்து நின்றான். லெகிரி கூறிய ஒரு சொல்லினால், அவன் முகம் சற்று மலர்ச்சியடைந்தது. அவனுடைய ஆன்மாவில் ஒரு வெற்றிக்குறி தோன்றிற்று. அவன் திடீரென்று தலை நிமிர்ந்து நேராக நின்றுகொண்டான். அவன் முகத்திலிருந்து கண்ணிரும் உதிரமும் கலந்து வழிந்துகொண்டிருந்தன. 'இல்லை, யசமான்! இல்லை, இல்லை, இல்லை என் ஆன்மா உங்களுக்குச் சொந்தமில்லை! அதை நீங்கள் விலைக்கு வாங்கவில்லை, அதை உங்களால் வாங்கவும் முடியாது! என் ஆன்மா என் பெருமான் ஏசுநாத ருக்கே உரியது. நீங்கள் எனக்குக் கேடு செய்யவே முடியாது!’ என்று முழங்கினான்ை டாம். - 'என்னால் முடியாதா? அதையும் சீக்கிரமே பார்த்துவிடுவோம்!' என்று அலட்சியமாகச் சீறினான் லெகிரி. அவன், அடே, சம்போ! அடே, கிம்போ! இந்த நாயைக் கொண்டுபோய்ச் சரியான பாடம் கற்பியுங்கள்! ஒரு மாதத்திற்கு இடையில் இவன் எழுந் திருக்க முடியாதபடி செய்யுங்கள்!' என்றும் அலறி ஞன். அரக்கர்களைப் போன்ற இரு நீகிரோவர்களும், மிகுந்த உற்சாகத்துடன், டாமைப் பற்றி இழுத்துக் கொண்டு சென்றனர். லூஸி, என்ன நேரும் என்ப தைக் கற்பனை செய்துகொண்டு, கிரீச்சிட்டுக் கத்தி னாள் . அடிமைகள் அனைவரும், எவ்வித எதிர்ப்பு மில்லாமல், கொலைஞர்களைப்போன்ற கொடியோர்களு டன் செல்லும்பொழுது, எழுந்து நின்று கண் கொட் டாமல் அவனையே பார்த்துக்கொண்டிருந்தனர்.

96

96