பக்கம்:நீகிரோ மாமா-மொழிபெயர்ப்பு.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16. ஆன்மாவுக்கு அழிவில்லை ! கள்ளிரவு. பாழடைந்த கொட்டகை ஒன்றில், டாம் தனியே தவித்துக் கொண்டிருந்தான். அவன உடலெல்லாய அடிபட்ட காயங்களிலிருந்து உதிரம் வடிந்துகொண்டிருந்தது. அங்கு அவனைச் சுற்றிலும், உடைந்த பாண்டங்களும், கழிவுப்பஞ்சும் சிதறிக் கிடந்தன. * அன்று காற்று இல்லாததால், மிகவும் புழுக்கமா யிருந்தது. புண்களின் எரிச்சல் ஒருபுறமும், கொசுக் களின் கூடி ஒரு புறமுமாக டாமைச் சித்ரவதை செய் தன. அவன் இடைவிடாமல் இறைவனைத் துதித்துக் கொண்டே யிருந்தான். ஆண்டவரே, கடைசிவரை துன்பத்தைத் தாங்கும் ஆற்றலே எனக்கு அளிக்க வேண்டும். விரைவில் எனக்கு வெற்றியளிக்க வேண் டும்' என்று அவன் பிரார்த்தனை செய்தான். அந்த நேரத்தில் பெண்ணுெருத்தி, சங் த டி செய்யாமல்,மெதுவாக அங்கே வந்தாள். அவள் பெயர் கேலி. அவளும் ஓர் அடிமை. ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக லெகிரியின் கொடுமைகளை யெல்லாம் தாங்கி யவள். அவளுல் அவமானப்படுத்தப்பட்டு, அவனைப் பழி வாங்க வேண்டுமென்று பல ஆண்டுகளாய்க் கருதிக் கொண்டிருந்தவள். அவளிடம் லெகிரிக்குக் கொஞ்சம் பயம் இருந்து வந்தது. அவள் சூனியக்காரி யென்றும், தீய தேவதைகளை ஏவிக் கெடுதல் செய்ப வள் என்றும் அவன் கம்பியிருந்தான். அவ்வாறு அவன் நம்பும்படி அவள் செய்திருந்தாள். அவள் லெகிரியின்

நீ-7 97

97