பக்கம்:நீகிரோ மாமா-மொழிபெயர்ப்பு.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வீட்டை விட்டு, இரவில் டாமைக் கவனிப்பதற்காக அங்கே வந்து சேர்ந்தாள். அவள் கையிலே ஒரு விளக்கு இருந்தது. அதன் உதவியால் அவள் டாம் இருக்குமிடத்தைக் கண்டு கொண்டாள். அவன் ஏதோ முனகிக்கொண்டிருங் தான். அவள், அவன் தலையைச் சற்றுத் துாக்கி, அவன் வாயில் கொஞ்சம் கொஞ்சமாகத் தண்ணிரை ஊற்றி ளுள். அவனுடைய புண்களிலே களிம்பு ஒன்றைத் தடவினுள். பிறகு அவள் அவனருகில் அமர்ந்து, ஆறுதல் சொன்னுள். தன்னைப் பற்றியும் சில விவரங் கள் சொல்லிவிட்டு, அவள் லெகிரியின் பிடிவாதத் தைப் பற்றியும் எடுத்துச் சொன்னுள். இந்த இடத்திலே கியாயம் என்பதே கிடையாது. இது ஒரு கரகம். அக்கிரமத்தைத் தவிர இங்கு வேறு எதுவும் கிடையாது. லெகிரி விடாக்கண்டன். இந்தத் தடவை நீ பணிந்து கொடுப்பது கல்லது ' என்று அவள் கேட்டுக்கொண்டாள். அவளுடைய பேச்சில் உண்மை இருப்பது போல் தோன்றிற்று. ஆனல் டாம் அதற்கு இசையவில்லை. நான் எப்படிப் பணியமுடியும் ? என் கையாலேயே நான் எப்படிக் கொடுமைகளையும், கொலை பாதகங்களே யும் செய்யமுடியும்? மனிதப் பண்புக்கு விரோதமாக நான் எதையும் செய்ய முடியாது ஆண்டவர் எனக்குத் துணைபுரிவார் என்று அவன் சொல்லி விட்டான். அவள் வெளியே புறப்படும் சமயத்தில், டாம் அவளிடம் தன் வேதப்புத்தகத்தைக் கொடுத்து, அதில் சில பகுதிகளைப் படிக்கச் சொல்லிக் கேட்டான். சிறிது நேரத்திற்குப்பின் கேஸி அவனுக்கு மறுபடி

9 &

98