பக்கம்:நீகிரோ மாமா-மொழிபெயர்ப்பு.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

யும் கொஞ்சம் நீர் கொடுத்தாள். தாகத்தால் தவித்துக் கொண்டிருந்த அவ னு க்கு இது பேருதவியாகத் தோன்றிற்று. அவள் வெளியேறிய பிறகு, அவன் சற்றே கண்ணயர்ந்தான். அன்றிரவு லெகிரி, தன் வீட்டுக் கூடத்தில், மது அருந்திவிட்டு, ஏதோ யோசித்துக்கொண்டு அமர்க் திருந்தான். வயல்களில் பருத்தி மிக அதிகமாக விளங் திருந்தது. அதை உடனே எடுப்பதற்கு ஏராளமான ஆட்கள் தேவையா யிருந்தார்கள். இந்த நேரத்தில் நல்ல வேலைக்காரளுகிய டாமையும் அடிக்கச் சொல்லி விட்டோமே ' என்று அவன் சிறிது வருந்தினன். அப்பொழுது சம்போவும், கிம்போவும் அங்கு வந்து சேர்ந்தனர். மூவரும் கன்ருகக் குடித்து, வெகு நேரம் வரை வெறியுடன் ஆடிக் கொண்டிருந்தனர். அவர்க ளுடைய அட்டகாசத்தில் வேட்டை காய்களும் வெருவி ஒடுங்கிக் கிடந்தன. இடையில் சம்போ லெகிரியிடம் ஒரு காகிதப் பொட்டலத்தைக் கொடுத்து, யசமான் ! டாமை அடிக்கும்போது அவன் கழுத்தில் ஒரு டாலரைக் கட்டி யிருந்தான், இந்தக் காகிதத்தில் நீண்ட ரோமம் ஒன்றையும் சுற்றிச் சட்டைப் பையில் வைத்திருந்தான். நாங்கள் அவனே அடிக்கும்பொழுது இவைகளைக் கழற்றி எடுத்துவந்தோம்!' என்று சொன்னன். லெகிரி டாலரையும் ரோமத்தையும் கண்டு அஞ்சினன். அவை சூனியம் வைப்பதற்குரிய பொருள்கள் என்று எண்ணி, அவன் டாலரை வெளியே எறிந்துவிட்டு, ரோமத்தை நெருப்பிலே எரித்துவிட்டான். அதிகாலையில், கீழ்வானம் வெளுக்கும் சமயத்தில், லெகிரி டாமைப் போய்ப் பார்த்தான். என்னடா,

99

99