பக்கம்:நீகிரோ மாமா-மொழிபெயர்ப்பு.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மாய இருந்தனர். அங்கேதான் விவசாயமும் மிகுதி யாக கடந்துவந்தது. ஊர் ஊராகச் சங்தைகள் கூடும். அவைகளில் வியாபாரிகள் அடிமைகளைக் கொண்டுவந்து விலை கூறி விற்பார்கள். மற்ற நாடு களில் ஆடு மாடுகளை விலைக்கு வாங்குவதுபோல, அங்கே அடிமைகளை விலைக்கு வாங்கிவந்தார்கள். இந்த அடிமைகளுக்கு மனித உரிமைகளே இல்லாம லிருந்தது. முதலாளிகள் அவர்களை அடிக்கலாம், மிதிக்கலாம், என்ன வேண்டுமானுலும் செய்யலாம். அவர்களே வதைத்துக் கொன்ருலும், எவ்விதக் கேள் வியுமில்லை. சட்டங்கள், நீதிகள் எல்லாம் வெள்ளே யர்களுக்கு மட்டுமே. இவ்வாறு நீகிரோ மக்கள் பல தலைமுறைகளாக அந்த காட்டிலே அவதிப்பட்டுவந்த னர். தெய்வபக்தியும் இரக்கமும் கொண்ட சில முத லாளிகள் நீகிரோவர்களிடம் அன்பு காட்டி வந்தனர். நாமும் மனிதர்கள், அவர்களும் மனிதர்கள் என்ற உணர்ச்சியுடன் அவர்கள் கடந்துவந்தனர். ஆயினும் பெரும்பாலான முதலாளிகள் கொடுமையே உரு வெடுத்து வந்தவர்கள். ஒவ்வொரு நாளும் அவர்கள் அடிமைகளைச் சவுக்கால் அடிப்பார்கள். அவர்களில் கணவர் மனைவியர்களைப் பிரித்து விற்பார்கள். சில சமயங்களில் குழந்தைகளை விற்பார்கள்; அல்லது, குழந்தைகளை வைத்துக்கொண்டு, பெற்ருேர்களை விற்றுவிடுவார்கள். மொத்தத்தில் கறுப்பர்கள் கால் கடைகளே விட மிகவும் கேவலமாக கடத்தப்பட்டார் கள். அவர்கள் சட்டப்படி உயிரற்ற பொருள்களா கவே கருதப்பட்டனர். அடிமைமுறை நிலைத்திருந்த காலத்தில் கென் டக்கி என்ற இடத்தில் ஷெல்பி என்ற பிரபுவின் குடும்