பக்கம்:நீகிரோ மாமா-மொழிபெயர்ப்பு.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

க.ந்து கொண்டிருந்தன. உடல் தேறுவதும், மறுபடி துன்பமடைவதுமாக, ஒவ்வொரு நாளும் டாம் கஷ்டப் பட்டுக் கொண்டிருந்தான். விரைவில் மரணம் வங்தால் நல்லது என்று அவன் எண்ணிஞன். கேஸி அவனை இரகசியமாகச் சந்தித்த சமயங் களில், லெகிரி விடமாட்டான் என்றும், ஏதாவது ஒரு காரணத்தை வைத்துக்கொண்டு, அவன் டாமை எலும்பு எலும்பாக உடைக்க ஏற்பாடு, செய்வான் என்றும் சொல்லிவந்தாள். லெகிரியிடம் அவள் பட்டு வந்த பாடுகளுக்குத் தன் நிலைமை எவ்வளவோ மேலா னது என்று டாம் எண்ணிஞன். அவளுடைய உட லும், உள்ளமும், ஆன்மாவுமே கரக வேதனையில் ஆழ்ந்திருக்கும்படி செய்துவிட்டான் லெகிரி. ஆளுல் டாமின் ஆன்மா பரிசுத்தமா யிருந்தது. கேஸிக்கு ஆ ணு ம், பெண்ணுமாக இரண்டு குழந்தைகள் இருந்தார்கள். அவர்களே வேறு எவனே விலைக்கு வாங்கிப் போய்விட்டான். அவள் ஒவ்வொரு காளும் லெகிரியைப் பழிவாங்கத் தக்க வாய்ப்பை எதிர்பார்த்திருந்தாள். அத்துடன், புதிதாக லெகிரி விலைக்கு வாங்கி வந்திருந்த எமிலினையும் அழைத்துக் கொண்டு, தான் தப்பியோடிவிட வேண்டுமென்றும் அவள் திட்டம் தயாரித்துக் கொண்டிருந்தாள். 17. சுதந்தரம் லெகிரியிடம் டாம் துன்பத்தில் உழன்றுகொண் டிருக்கையில், ஹாரிஸும் எலிஸாவும் இன்பமாக வாழ்ந்து கொண்டிருந்தனர். அவர்களுடைய தைரி

102

102