பக்கம்:நீகிரோ மாமா-மொழிபெயர்ப்பு.pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18. அடிமை வேட்டை லெகிரியின் வீட்டு மாடியில் ஓர் அறை இருந்தது. அதில் எவரும் போய்த் தங்குவதில்லை. அதில் பேயடைந்திருப்பதாக அடிமைகள் கம்பி வந்தனர். ஏனெனில் முற்காலத்தில் நீகிரோ ஸ்திரீ ஒருத்தியை அதில் அடைத்து வைத்து லெகிரி கொன்றுவிட்டான் என்று அவர்கள் பேசிக்கொண்டனர். இதைக் கேள்விப்பட்ட பின், கேஸி அங்கே பேய் இருப்பதாகவே லெகிரியிடம் அடிக்கடி சொல்லி வந்தாள். அவனும் அதை கம்பியிருந்தான். அந்த அறையை அவன் திறப்பதே யில்லை. அதனருகில் செல்வதுமில்லை. கோழைகளாயும் முரடர்களாயும் இருப்பவர்களுக்கு இத்தகைய அச்சம் ஏற்பட்டால், எளிதில் நீங்காது. கேஸி அந்த அறையில், கடரையின் அடியில், ஒரு சுவரின் மீது உடைந்த கண்ணுடிக் குப்பி யொன்றை வைத்திருந்தாள். காற்று வீசும்பொழுது அந்தக் குப்பியிலிருந்து சப்தம் எழுந்து வந்தது. அடிமைகள் அதைப் பேய்களின் அலறல் என்று கருதினர். அடிக்கடி அதைப்பற்றிப் பேசிக்கொண்ட னர். லெகிரிக்கு எதிராக அந்த அறையைப் பயன் படுத்திக் கொள்வதற்காகவே கேஸி இத்தகைய ஏற்பா டெல்லாம் செய்திருந்தாள். ஒரு காள் இரவில் திடீரென்று ஏதோ ஓசை கேட்டதால், டாம் கண்விழித்துப் பார்த்தான். அவனுக்கு எதிரில் கேஸி கின்று கொண்டிருந்தாள். அமைதியாக அவள் டாமிடம் ஒரு செய்தியைக்

I () so

106