பக்கம்:நீகிரோ மாமா-மொழிபெயர்ப்பு.pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கூறினுள் : டாம் லெகிரி நிறையப் பிராங்தியைக் குடித்துவிட்டு, அயர்ந்து உறங்கிக் கொண்டிருக் கிருன். கான் ஒரு கோடரி எடுத்து வைத்திருக்கிறேன். இது தக்க சமயம். நீ போய்க் கோடரியால் அவனை வெட்டிக் கொன்றுவிட்டு வந்துவிடு! உன்னல் எல்லா அடிமைகளுக்கும் விமோசனம் கிடைக்கும். அடிமைகளாகிய கம்மை எலும்பு எலும்பாக அடித்து ஒடிக்கும் அந்தப் பாவியை ஒழிப்பது புண்ணியமான காரியமாகும். நீ உடனே போவது நல்லது ' அவள் பேசியதைக் கேட்ட டாம் சிறிது கேரம் திகைத்து கின்றன். ' என்ன, கேஸி தீமையிலிருந்து ஒரு நாளும் கன்மை விளையாது ! உனக்கு ஏன் இந்தக் கெட்ட யோசனை தோன்றிற்று ? என்று அவன் கேட்டான். " உன்னுல் முடியாதென்ருல், நானே அதைச் செய்யவேண்டும் ! நான் பெண்ணுக இருப்பதால், என்னுல் இயலாதென்று உன்னிடம் சொன்னேன். எப்படியாவது அந்தக் கொடியவனைத் தொலைத்து விட்டு, கானும் சாக வேண்டியதுதான் ! என்ருள் கேளலி. அவள் வெறி கொண்டிருந்தாள். லெகிரியின் எல்லே கடந்த கொடுமைகளால், அவள் கைந்து நசுங் கிப் போயிருந்தாள். அவன் ஒருவனே ஒழித்துவிட் டால், பலருக்கு கன்மை என்ற முறையிலேயே அவள் சிந்தித்து முடிவு செய்திருந்தாள். ஆனல் கொடுமை யைக் கொடுமையாலேயே ஒழிக்க முடியுமா ? அதைப் பற்றி டாம் மிகத் தெளிவாக அறிந்திருங் தான். வேத நூலில் கூறியுள்ளபடி கிறிஸ்துகாத ருடைய உபதேசங்களை அவன் முற்றிலும் நம்பியிருங்

107

107