பக்கம்:நீகிரோ மாமா-மொழிபெயர்ப்பு.pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

தான். தீமையைத் தீமையைக் கொண்டு எதிர்க்கக் கூடாது என்றும், அன்பிளுலேயே வெல்லவேண்டும் என்றும் அவர் கூறியிருந்தார். உலகத்தாருக்காக அவரே சிலுவையில் ஏறி மரிக்கவில்லையா? அவர் தலைமீதே இராணுவ வீரர்கள் முள் முடியை வைத்துக் கூத்தாடவில்லையா ? தமக்கு இழைத்த கொடுமைகளை யெல்லாம் அவர் பொறுமையுடன் தாங்கிக்கொண் டாரல்லவா ? கடைசியில் அவர்கள் அறியாமல் தவறு செய்வதாயும், அவர்களையும் மன்னிக்கவேண்டு மென்றும் அவர் பரமண்டலத்திலுள்ள பரம பிதாவை வேண்டிக் கொள்ள வில்லையா ? இந்த விஷயங்களை யெல்லாம் சிறு வயதிலிருந்தே கேட்டும், படித்தும் தெளிவடைந்திருந்த டாம் நியாயத்திற்கு விரோத மாக நடப்பதற்கு எப்படி இசைவான் ? லெ கிரியின் கொடுமைகள் மிருகத்தனமானவைதாம் ஆளுல் அவைகளை விட மோசமான ஒரு கொடுமையைக் கேஸி செய்வதை அவன் எப்படி அனுமதிக்க முடியும்? டாம், அவளேத் தனியாக வெளியே அழைத்துச் சென்று, அவளுக்கு ஆறுதல் கூறினன். கிறிஸ்து பெருமானை விடவா நமக்கு அதிகத் துன்பம் உண்டாகி விட்டது? அவர், பிறர் உதிரத்தைச் சிங் தவிடாமல், புனிதமான தம் உதிரத்தையே சிந்தினர். இதை நாம் உணர்ந்து பார்க்கவேண்டும் சில சமயங்களில் ஏற்படும் மன வேதனைகளால் நாம் கோபத்தில் பழி வாங்க எண்ணக்கூடாது. எது எப்படியாயினும், கடைசியில் அன்புதான் வெல்லும், தர்மம்தான் வெல்லும் நாம் ஆத்திரப்படக் கூடாது ! நாம் நரகப் பாதையை விட்டு, சுவர்க்கப் பாதையிலேயே நடக்க வேண்டும் !"

I () &

108