பக்கம்:நீகிரோ மாமா-மொழிபெயர்ப்பு.pdf/117

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டாமுடைய வார்த்தைகளும், அவ னு ைட ய உணர்ச்சியும் கேஸியின் மனத்தை மாற்றிவிட்டன. அவன் கூறிய தத்துவத்தில் அவளுக்கு முழு கம்பிக்கை ஏற்படவில்லை என்ருலும், அன்பு நிறைந்த அவனுடைய பேச்சுக்கு மதிப்புக் கொடுக்கவேண்டும் என்று அவன் எண்ணினுள். அங்த நேரத்தில் அவளுக்கு மாற்று வழி ஒன்று தோன்றிற்று. கானும், எமிலினும் இங்கிருந்து தப்பி ஓடிப் போகிருேம் ! நீயும் வந்துவிடு இங்கிருங் தால், விரைவில் உன்னேயும் கொன்று விடுவார்கள் !’ என்று அவள் சொன்னுள் i. # டாம் தான் விலைப்பட்ட அடிமை யென்றும், தான் ஆண்டவனே நம்பிக்கொண்டு அங்கேயே இருப்பதா யும் கூறினன். ஆளுல் நீங்கள் ஓடிப் போங்கள ! நீங்கள் பெண்கள் ! பாவம், எமிலினே கினேத்தால், பரிதாபமா யிருக்கிறது ! உங்களுக்கு ஆண்டவா கருணை காட்டுவார் ' என்று அவன் சொன்னன். கேஸி கன்ருக யோசனை செய்து ஒரு திட்டம் வகுத்துக் கொண்டாள். அவளும், எமிலினும் வெளியே ஒடிச் சென்ருல், லெகிரி தன் வேட்டை நாய்களே எவி, அவர்களே விரைவில் பிடித்துவிடுவான். முதலில் அந்த நாய்களுக்குத் தப்பவேண்டும். அடுத்தபடி சம்போ, கிம்போ முதலிய கொடியவர்களுக்குத் தப்ப வேண்டும். எனவே, கேஸி மிக ஆழ்ந்து யோசனை செய்தாள். லெகிரியின் வீட்டு மாடியில், பேயடைக் திருப்பதாகக் கருதப்பட்ட அறையில், அவள் இரண்டு பேர்களுக்குச் சில நாட்களுக்குத் தேவைப்படக்கூடிய உணவுப் பொருள்களைச் சேர்த்து வைத்தாள். தாங்கள் இருவரும் முதலில் வெளியே ஒடிப் போய்விட்டு, பிறகு இரகசியமாக அந்த அறைக்குள் வந்து தங்கியிருக்க

1 09

109