பக்கம்:நீகிரோ மாமா-மொழிபெயர்ப்பு.pdf/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

அந்த நேரத்தில், அவன் உள்ளத்திலும், உடலி லும், உதிரத்திலும், ஒவ்வொரு நரம்பிலும் பின்கண்ட கிறிஸ்துநாதரின் பொன்மொழி ஒலித்துக்கொண்டே யிருந்தது : உடலை வதைப்பவர்களுக்கு அஞ்சவேண் டாம்; அதற்குப் பின்னல் அவர்கள் ம்ேலும் செய்யக் கூடியது எதுவுமில்லை! இறைவனே அவனைத் தொட் டுத் தட்டிக்கொடுப்பது போன்ற ஓர் உணர்ச்சி அவ னுக்கு ஏற்பட்டது. அவனுடைய விடுதலை நெருங்கி விட்டது! அவன் போய்ச் சேரவேண்டிய வீடும் அவன் கண்களுக்குப் புலனாகிவிட்டது. அவனைக் கண்டவுடன் லெகிரி, பற்களை கறகற வென்று கடித்துக்கொண்டு சீறிப் பாய்ந்தான். அடே, டாம் ! கான்-என் மனத்தில்-உன்னைக் கொன்று விடத் தீர்மானித்துவிட்டேன், தெரியுமா ?’ என்று அவன் கேட்டான். அது தாங்கள் செய்யக் கூடியதுதான் ! என்று மிகுந்த அமைதியுடன் டாம் தெரிவித்துக்கொண் டான் LfT 6or. "அந்தப் பெண்கள் எங்கே யிருக்கிறார்கள் என்ப தைச் சொல்லாவிட்டால், நான் உன்னைக் கொல்வது கிச்சயம் !’ 'தங்களிடம் நான் சொல்லக் கூடியது எதுவு மில்லை." 'கறுப்புக் கிறிஸ்தவப் பதரே, உனக்குத் தெரி யாது என்று என்னிடம் சொல்லவா துணிந்துவிட் டாய்?’ என்று கூறி, வெறி கொண்ட மாடுபோலத் துள்ளிக் குதித்தான் லெகிரி. "ஆம், யசமான், எனக்குத் தெரியும் ஆனல் உங்களிடம் எதுவும் சொல்லமாட்டேன் ! நான் இறக்

II 5

115