பக்கம்:நீகிரோ மாமா-மொழிபெயர்ப்பு.pdf/124

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

கத் தயாராயிருக்கிறேன். உங்களுடைய அரிய ஆன்மாவைக் காப்பதற்காக, வயது காலத்தில், நான் என் உடலிலுள்ள ஒவ்வொரு சொட்டு உதிரத்தையும் உங்களுக்கு அளிக்கத் தயாராயிருக்கிறேன்! ஆனல் உங்களுடைய ஆன்மாவுக்கு இவ்வளவு பெரிய பாவத்தை-பழியைத் தேடிக்கொள்ள வேண்டாம். இதனல் எனக்கு ஏற்படும் தீங்கைவிட உங்களுக்குத் தான் அதிகக் கேடு விளையும். உங்களால் முடிந் ததையெல்லாம் செய்யுங்கள். என் துயரங்கள் இத் தோடு ஒழியும் ஆளுல் நீங்கள்தான் கழுவாய் தேடிக் கொள்ள வேண்டியிருக்கும்! என்று சாந்தமாக, நிதா னத்துடன் கூறினன் டாம். லெகிரி திகைத்துவிட்டான். ஆளுல் ஒரு கண கேரம்தான் அப்படி நின்ருன். மறுபடி வெறி வந்து விட்டது. மறுபடி சைத்தான் அவன் உள்ளத்துள் புகுந்துவிட்டான். அவன் வாயில் நுரை கக்கிக் கொண்டு, கோபத்தால் கொங்தளித்து, டாமை ஓங்கி யடித்துக் கீழே உருட்டிவிட்டான் ! அன்று இரவு செங்குருதி பாய்ந்த சிவப்பு இர வாகப் போய்விட்டது! சம்போவும், கிம்போவும், கைகள் சலிக்கும்வரை டாமைச் சவுக்காலடித்தனர். கைகளின் முட்டிகளால் குத்தினர். அவன் முகத்தி லிருந்தும், உடலிலிருந்தும் உதிரம் பெருகிக்கொண் டிருந்தது. அத்தனை அடிகளையும், அத்தனை துன்பங் களையும், அவன் மிக்க உறுதியுடன் தாங்கிக் கொண்டேயிருந்தான். கடைசியாக அவன் கீழே சாய்ந்துவிட்டான். 'யசமான், ஆள் அநேகமாய்த் தீர்ந்தே போய் விட்டான்' என்ருன் சம்போ.

II 6

116