பக்கம்:நீகிரோ மாமா-மொழிபெயர்ப்பு.pdf/125

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

அத்தனையையும் நின்று பார்த்துக்கொண்டிருந்த லெகிரி, நிறுத்த வேண்டாம் ! இன்னும் அடியுங்கள் அவன் வாயிலிருந்து உள்ளது வெளிவரும்வரை அடித்து நொறுக்குங்கள் ! எனக்காக ஒவ்வொரு சொட்டு இரத்தத்தையும் தருவதாக அவன் சொன் னுன் ; அத்தனையையும் வாங்கிவிட வேண்டியது தான் !" என்று ஊளையிட்டான். டாம் கண்களைத் திறந்தான். கொடுமையே உரு வாகி கின்ற யசமானனை ஒருமுறை பார்த்தான். ஏ இரங்கத்தக்க அற்ப ஜந்துவே! இனி நீ செய்யக் கட்டியது எதுவுமில்லை ! உன்னை நான் மனமார மன் னிக்கிறேன்!" என்று சொல்லிவிட்டு, அவன் கினை வற்று உருண்டுவிட்டான். லெகிரி, 'இத்தோடு சரி ! இனி அவன் மறுபடி வாய் திறந்து பேசமாட்டான் ' என்று கொக்கரித் தான். அவன் சற்று 'முன்னுல் ககர்ந்து சென்று டாமை உற்றுப் பார்த்து. "ஆம், தீர்ங்தே போனுன் ! என்று சொல்லிவிட்டுச் சென்ருன். டாம், மெய்மறந்த நிலையில், தரையிலே கிடங் தான்; மெல்லிய பட்டிழைபோல் சிறு மூச்சுவிடுவதைத் தவிர, உடலின் அசைவுகள் யாவும் ஒடுங்கிவிட்டன. டாம் நெடுநேரம் அடிகளைத் தாங்கிய பொறு மையை - புனிதமான பொறுமையை - எண்ணிப் பார்த்த சம்போவும், கிம்போவும் உள்ளம் உருகிவிட் L– GOTT, சம்போ, என்னடா, வேலை செய்தோம் ? இது பயங்கரமான பாவமடா I என்று சொனுன். 'பாவம் அடிக்கச் சொன்னவருக்குத்தான் ; நமக் கில்லை!" என்றுன் கிம்போ.

II 7

117