பக்கம்:நீகிரோ மாமா-மொழிபெயர்ப்பு.pdf/130

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஜியார்ஜின் உள்ளம் கொதித்தது அடங்காத கோபத்தால் அவன் குமுறிஞன். ஆளுல் கோபத்தைக் காட்ட வேண்டிய சக்தர்ப்பம் அதுவன்று என்று கருதி, அவன் தன்னைக் கட்டுப்படுத்திக்கொண்டு, வெளியே ஓடிச் சென்ருன். வழியில் அவனுடைய வண்டிப் பக்கம் கின்றுகொண்டிருந்த நீகிரோ பையன் ஒருவன் டாம் இருந்த கொட்டடியை அவனுக்குக் காட்டினன். உடனே ஜியார்ஜ் அங்கு ஓடிச்சென்ருன். டாம் படுத்திருந்த கொட்டடிக்குள் அவன் நுழைந்தவுடனே அவன் தலை சுற்றத் தொடங்கிவிட்டது. இதயத் துடிப்பும் ஒடுங்கத் தொடங்கிற்று. இப்படியும் கடக் திருக்கலாமா ? இது என்ன ஆச்சரியம் !' என்று முன கிக்கொண்டே அவன், டாம் மாமா ! என் பழைய கண்பா ! நிமிர்ந்து பார் ! நான்தான் ஜியார்ஜ் வந்திருக் கிறேன் ! என்னை உனக்குத் தெரியவில்லையா, மாமா? என்று கேட்டான். 'ஜியார்ஜ் யசமான் ஜியார்ஜ் யசமான் ' என்று மெல்லிய குரலில் டாம் இருமுறை கூறிக்கொண் டான். அவனுடைய உள் மனத்தில் ஜியார்ஜைப் பற்றிய ஒரு கினைப்புத்தான் இருந்தது. ஆனல் கொடுமை நிறைந்த அந்த வனங்தரத்தில் அவன் எங்கே வரப் =. போகிருன் என்று அவன் எண்ணியிருந்தான். ஜியார்ஜ் என்ற பெயரைக் கேட்டதும், அவன் திகைப் படைந்தது போலத் தோன்றிற்று. இரண்டு நாட்களாக அன்னமோ, ஆகாரமோ, எதுவுமில்லை ; இரவில் இரகசியமாக அவனைப் பார்க்க வந்த அடிமைகள் அவன் வாயில் துளிதுளி தண்ணிர் ஊற்றியதைத் தவிர, அவனுக்கு வேறு ஒன்றும் தெரி யாது. அவர்கள் அவன் அருகில் அமர்ந்து கண்ணிர்

122

122