பக்கம்:நீகிரோ மாமா-மொழிபெயர்ப்பு.pdf/132

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

நாம் நம்முடைய வீட்டுக்குத் திரும்பிச் செல்வோம் 1: என்றான் ஜியார்ஜ். 'ஜியார்ஜ், என் அருமை ஜியார்ஜ் ! காலம் கடந்து போய்விட்டது. நீ வருமுன்பே, ஆண்டவர் என்னை விலைக்கு வாங்கி ஆட்கொண்டு நானும் அவரிடம் போகத் துடித்துக் கொண்டிருக் கிறேன்! 'மாமா! நீ இறக்கவே கூடாது இந்தப் பயங்கர மான இடத்தில் நீ அநாதையாகக் கிடந்து மடிவதை நான் எப்படிச் சகித்திருப்பேன் ' என்று அழுது புலம்பினான் ஜியார்ஜ். அவன் டாமின் அருகில் முழங்கால் பணிந்து, அவன் கையைத் தன் இரு கைகளாலும் பற்றிக் கொண்டிருந்தான். அவனுடைய கண்களிலிருந்து அருவிபோலக் கண்ணிர் பாய்ந்துகொண்டிருந்தது. டாம், "ஜியார்ஜ் நான் அநாதை என்று சொல் லாதே! நான் அநாதையாக வாழ்ந்த தெல்லாம் முடிந்துவிட்டது . இப்பொழுது சுவர்க்கம்ே எனக்குக் கிடைத்துவிட்டது கிறிஸ்து பெருமான் எனக்கு வெற்றி யளித்துவிட்டார் அவரை வாழ்த்தி வணங்கு வோம் !" என்று கூறினான். ஜியார்ஜ் திகிலடைந்து மெளனமாக அமர்ந்திருந் s தான். டாம் அவன் கைகளே இறுகப் பிடித்துக் கொண்டு, மெதுவாகப் பேசலானன் : 'ஜியார்ஜ் நீ குளோவிடம் என்னை இந்த நிலையில் கண்டதாகச் சொல்லிவிடாதே பாவம், அவள் துடி துடித்துப் போவாள் நான் சுவர்க்கத்திற்குப் போவதை மட்டும் சொல்லு. இதுவரை ஆண்டவர் எனக்கு உதவி செய்து, எப்பொழுதும் என்னைக் காத்துவந்தார் என்

1 2 4

124