பக்கம்:நீகிரோ மாமா-மொழிபெயர்ப்பு.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மறையுமுன்பே, அவள் ஒவறியோ அடைந்தாள். ஆற்றைப் பார்த்ததும், அவள் கிடுக் கிட்டாள். வெள்ளம் அதிகமாயிருந்தது. தண்ணீரில் இறுகிய பனிப்பாறைகள் கட்டி கட்டியாக மிதந்து கொண்டிருந்தன. அந்த ஆற்றை எப்படித் தானை () வது என்று திகைத்து, அவள் அருகிலிருந்த ஒரு சத்திரத்தை நாடித் திரும்பினுள். நெந்தூரம் நடந்ததால், அவள் கால்கள் தள்ளாடிக் கொண்டிருந்தன. பசியோ அதிகமாயிருந்தது. அன்றிரவு சத்திரத் திலே தங்கி ஓய்வெடுத்துக்கொண்டு, மறுநாள் காலை யில் ஓர் ஒடத்தின்மூலம் ஆற்றைக் கடந்து செல்ல லாம் என்று எண்ணி அவள் சத்திரத்திற்குச் சென்றாள்.

சத்திரத்தை கடத்திவந்த கிழவி அவளுடைய கிலேமையைக் கண்டு பரிதாபப்பட்டாள். எலிஸா அங்கு போனவுடன் ஒடம் கிடைக்குமா என்பதையே முதலாவது விசாரித்தாள். வெள்ளம் காரணமாக ஒடம் நிறுத்தப்பட்டுவிட்டது என்று கிழவி சொன்னுள். அவள் எலிஸாவும் குழந்தையும் தங்குவதற்கு ஓர் அறையைக் காட்டினுள். அங்கே எலிஸா குழங்தை யைப் படுக்கையில் வைத்துத் துரங்கச் செய்தாள். அப்பொழுது கிழவி அங்கே வந்து சிறிதுநேரம் அவ ளுடன் பேசிக்கொண்டிருந்தாள். தனக்குத் தெரிந்த நண்பன் ஒருவன் இருப்பதாகவும், அவன் வெள்ளத் திலே தைரியமாக ஒடத்தை விடுவான என்று கேட் டுச் சொல்வதாகவும் அவள் தெரிவித்தாள். அவள் வெளியே சென்றபின், எலிஸா சாளரத்தின் பக்கமாக கின்று, ஆற்றைப் பார்த்துக் கொண்டிருந்தாள். அவ ளுக்கு உறக்கம் வரவில்லை. வெளியே ஆறு சீறிப்

31

21