பக்கம்:நீகிரோ மாமா-மொழிபெயர்ப்பு.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

என்று அவள் அதைப் பலமாகப் பிடித்துக்கொண் டாள். பனிக்கட்டிகள் ஆடி அசைந்து வெள்ளத்தோடு போய்க்கொண்டிருந்தன. ஓர் அடி தவறினால், அவள் நீருள் விழுந்திருப்பாள். அவள் உள்ளம் துடித்தது; உடலும் துடித்தது. கால்களிலிருந்த செருப்புகள் கழன்று விழுந்துவிட்டன. அவள் அணிந்திருந்த காலுறைகளும் கிழிந்திருந்தன. தாங்க முடியாத குளிர்ச்சியினல் பாதங்கள் மரத்துப்போயின. அவை களிலிருந்து இரத்தமும் பெருகிக்கொண்டிருந்தது. ஆற்றின் மறுகரையை அடையும் நேரத்தில், அவள் கால் தவறி நீரில் விழுந்துவிட்டாள். தண்ணிர் கழுத்தளவுக்கு இருந்தது. அவள் குழந்தையைத் தலைக்கு மேலே தூக்கிக்கொண்டாள். அப்பொழுது கரையில் கின்று கொண்டிருந்த வயோதிகர் ஒருவர், அவருடைய சட்டைத் துணியைப் பற்றி இழுத்து, அவளை மெதுவாகக் கரையிலே சேர்த்தார். கல்ல வேளை, கரை அருகிலே சறுக்கி விழுந்தாய்! இல்லா விட்டால், வெள்ளத்தோடு போயிருப்பாய் ! என்று அவர் கூறிஞர். எலிஸா, அவர் தன்னைப் பிடித்து, வியாபாரியிடம் ஒப்படைத்துவிடுவாரோ என்று அஞ் சினுள். என் குழந்தையைக் காப்பாற்றுங்கள் ! எப்படியாவது அவனை மறைத்துவைத்துக் காப்பாற் றுங்கள் ' என்று அவள் கூவிளுள். தாடியும் மீசையும் வளர்த்து, பெரிய ஞானியாக விளங்கிய அந்த உத்தமர், * நீ மிகவும் தைரியசாலி தான்! இரவிலே இப்படித் துணிந்து வரலாமா?’ என்று கேட்டார். எ லிஸா, என் குழங்தையை விற்றுவிட்டார்கள் ! அவனைக் காக்கவே ஓடி வங்தேன்! அவனே விலைக்கு

24

24