பக்கம்:நீகிரோ மாமா-மொழிபெயர்ப்பு.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6. அடைக்கலம் அளித்த அன்பர்கள் சைம்ஸ் காட்டிய வெண்மை நிறமான மாளிகை யைச் சுற்றிப் பார்த்து, எலிஸா சமையலறைக் குள்ளே புகுந்தாள். அங்கே தினு என்ற நீகிரோ கிழவியும், கட்ஜோ என்ற வேலைக்காரனும், அவ ளுடைய பரிதாப நிலையைக் கண்டு, வருத்தத்துடன் அவளை உள்ளே அழைத்துச் சென்றனர். அவ ளுடைய உடைகள் கிழிந்திருந்தன. அவளுடைய பாதங்களிலிருந்து அப்பொழுதும் இரத்தம் வடிந்து கொண்டிருந்தது. கட்ஜோ அவள் கையிலிருந்த பையனைத் தான் வாங்கிக்கொண்டு, கீழே அமர்ந்து, அவன் பாதங்களைச் சூடு உண்டாகும்படி கன்ருகத் தேய்த்தான். எலிஸா கிற்க முடியாமல், அப்படியே இரண்டு காற்காலிகளின் மீது சாய்ந்தாள். தின அவ ளைத் தடவிக்கொடுத்து, அவளுக்கு ஆறுதல் சொல் லிக்கொண்டிருந்தாள். ஆளுல் எலிஸா கண்களே மூடிக்கொண்டு இந்த உலக கினைவேயில்லாமலிருந் தாள். எலிஸா அழகுள்ளவள்; பார்வைக்கு அவள் பெரும்பாலும் வெள்ளேக்காரி போலவே இருப்பாள். ஆயினும் அவள் நீகிரோ வம்சத்தைச் சேர்ந்தவள் என்பது தெளிவாய்த் தெரிந்தது. அவளும் பையனும் தாங்கள் வேலை செய்துகொண்டிருந்த இடத்திலிருந்து தப்பி ஓடி வந்திருப்பார்கள் என்று கட்ஜோ எண்ணிக் கொண்டான். அந்தச் சமயத்தில் மாளிகையின் கூடத்திலே வீட்டுச் சொந்தக்காரர் திருவாளர் பர்ட் என்பவரும்

岛6

26