பக்கம்:நீகிரோ மாமா-மொழிபெயர்ப்பு.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உடனே கட்ஜோவின் கரங்களிலிருந்து கீழே குதித்து, தன் தாயின் பக்கம் ஓடிப்போய் கின்ருன். திருமதி பர்ட், இங்கே யாரும் வரமாட்டார்கள், எவரையும் பிடிக்க்மாட்டார்கள்! நீங்கள் நல்ல இடத் திற்குத்தான் வந்து சேர்ந்திருக்கிறீர்கள். கவலைப் படாதே' என்று சொன்னுள். ஆண்டவன் உங்களை ஆ. வதிப்பான்!” என்று சொல்லி, எலிஸா ஒரு கையால் தன் பையனை அனைத் துக்கொண்டு, அப்படியே கண்ணயர்ந்துவிட்டாள். சிறிது நேரத்திற்குப்பின் அவள் கண்களைத் திறங் தாள். அப்பொழுது யசமானியம்மாள் அவள் அரு கில் அமர்ந்துகொண்டு அவளைப்பற்றிய வரலாற்றைக் கேட்டாள். எலிஸா தான் கென்டக்கியிலிருந்து வந்த தாயும், யசமானர் தன் பையக விற்றுவிட்டதாயும், அவர் மிகவும் கல்லவர் என்றும், ஏதோ அவசியம் ஏற்பட்டதால்தான் விற்க, கேர்ந்தது A ன் மும் தெரிவித் தாள். " ஆற்றை நீ எப்படிக் கடம்துவந்தாய் ? என்று யசமானி கேட்டாள். பனிக்கட்டிகளின்மீது ஏறித் தாவி வந்தேன். ஆபத்துக் காலத்தில் எங்கிருந்தோ துணிவு வந்து விடுகின்றது! ஆண்டவரும் துணை செய்தார்!" ஒரு தாய் தன் குழந்தைக்காக எவ்வளவு தியாகம் செய்கிருள் என்பதை எண்ணித் திருமதி பர்ட் கண் னிர் உகுத்தாள். ஒரு மாதத்திற்கு முன்புதான் அவளுடைய கடை சிப் பையன் இறந்துபோயிருந்தான். அந்தச் சோகம் அவள் உள்ளத்தில் நிறைந்திருந்ததால், எலிஸாவிடம் அவள் மிகுந்த அன்பு கொண்டாள். 'என் கணவரிடம்

28

28