பக்கம்:நீகிரோ மாமா-மொழிபெயர்ப்பு.pdf/4

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

 பதிப்புரை

உலகப் புகழ்பெற்ற இலக்கியங்களுள் ஒன்றான இந்த நூல் தமிழ் நாட்டு மாணவ,மாணவிகளுக்குப் பெரிதும் பயன்படவேண்டும் என்ற நோக்கத்துடன் இதனை வெளியிடுகிறேம். மாணவர்கள் மட்டுமின்றி, இதனைப் படிக்க நேரும் எப் பருவத்தினரையும் இந்த நூல் தன்பால் முழுதும் கவர்ந்து, அவர்கள் உள்ளங்களில் ஒரு கிளர்ச்சியை உண்டுபண்ணும் என்பது திண்ணம். மனிதனகப் பிறந்துவிட்ட யாரும் மற்ற எந்த மனித உயிரின்மீதும் ஆதிக்கம் செலுத்தும் உரிமை கொள்வதற்கில்லை. மாறக, பிற உயிரைத் தன்னுயிரே போல் கருதக்கூடிய பண்பிலும் அன்பிலும்தான் செயல்பட வேண்டும். அமெரிக்காவில் நீகிரோவர்கள் அடிமைப்பட்டுக் கொடுமைப் படுத்தப்பட்ட செய்தி களைப்பற்றி உலகமே அறியும். டாம் மாமா என்ற அபூர்வமான-வியக்கத்தக்க பாத்திரத்தையும், மற்றப் பாத்திரங்கள் சிலவற்றையும் படைத்து, இந்த நூலின் மூலம் உலகக் கவனத்தையே கவர்ந்துவிட்டார். இதன் மூல ஆசிரியை. டாம் மாமாவின் கதையைப் படிக்கும் ஒவ்வொரு வாசகரும் இரு துளிக் கண்ணிர் சிந்தாமல் இப் புத்தகத்தை மூடிவைக்க மாட்டார்கள். இத்தகைய மன நெகிழ்ச்சி ஏற்படுத்தும் நூலின் மூலம்