பக்கம்:நீகிரோ மாமா-மொழிபெயர்ப்பு.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கொண்டிருந்தாள். அவளுடைய உள்ளம் குமுறிக் கொண்டிருந்தது. கண்களில் நீர் வற்ருமல் வடிந்து கொண்டிருந்தது. பிறந்தது முதல் டாம் அந்தக் குடிசையிலேயே வாழ்ந்து வந்தான். அன்று அவன் வெளியேற வேண்டியிருந்தது. அவன் தன் வாழக்கை யில் மீண்டும் அந்தக் குடிசைக்கு அநேகமாகத் திரும்பி வர மாட்டான். தெற்கு ராஜ்யங்களிலே விற்கப்படும் அடிமைகள் பருத்திக் காடுகளில் மிகவும் துன்புறுத் தப்படுவார்கள். வேலையும் அதிகம், உணவும் குறைவு. முதலாளிகள் அவர்களைக் கசக்கிப் பிழிந்து விடுவார்கள். இத்தகைய விஷயங்களைப் பற்றிக் 'குளோ எண்னமிட்டுக் கொண்டிருந்தாள்.

அவள் அன்று டாமுக்கு மிகவும் பிரியமான உணவுகளை அளிக்க வேண்டுமென்று எண்ணிச் சமைத்திருந்தாள். குடிசையிலிருந்த சிறந்தகோழியை அடித்துக் கறி சமைத்திருக்தாள். அவளுடைய பையன்கள் இருவரும் அங்தக் கறியை அள்ளித் தின்று சிரித்து மகிழ்ந்து கொண்டிருந்தனர். அப்பா இன்று கடைசியாக இந்த ஒரு வேளை தான் இங்கே சாப்பிடப் போகிருர். இந்தப் பிறவியில் இனிமேல் அவரை காம் காணமுடியாது. அதற்காகவா இப்படிச் சிரித்துக் கூத்தடிக்கிறீர்கள்?’ என்று அவள் குழங் தைகளை அதட்டி அடித்தாள்.

டாம் அவளைத் தடுத்தான். நீ ஏன் இப்படிப் பேசுகிருய்ரி இங்குள்ள கடவுள்தான் அங்கும் இருக் கிருர். அவர் என்னைக் கைவிட மாட்டார்!’ என்று அவன் கூறினன்.

'சில சமயங்களில் அந்தக் கடவுள் செய்யும் பயங்கரமான லீலைகளே நம்மால் தாங்க முடியவில்


31

31