பக்கம்:நீகிரோ மாமா-மொழிபெயர்ப்பு.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கொண்டிருந்தது. மனிதர்களிலே அடிமைகளுக்கு மட்டும் தாய், தங்தை, மனைவி, மக்கள் ஒருவரும் கிடையாது. தளிர்த்து வளரும் மரங்களை வேரோடு பறித்து வேறிடத்தில் எறிவது போல, அடிமைகளை மட்டும் எறியலாம். புது இடங்களில் அவர்கள் மீண்டும் வேரூன்றி வளர்ந்தால் நல்லது, அல்லாமல் பட்டு கசித்துப் போனாலும், எவரும் கவலைப்படப் போவதில்லை. அடிமைகள் உயிருள்ள ஜந்துக்களே அல்லர், அவர்கள் வெறும் பொருள்கள் என்று இருந்தது அங்தக் காலத்தில். எவ்வளவோ பெருந்தன்மையும் இரக்கமும் கொண்ட ஷெல்பி பிரபுவே தன் தலைமையான வேலைக்காரனைக் கொடிய வியாபாரி ஒருவனுக்கு விற்க நேர்ந்தது என்றால், மற்ற முதலாளி களைப்பற்றி என்ன சொல்ல முடியும்?


திருமதி ஷெல்பியும் டாம் மாமாவின் குடிசைக் குள்ளே வந்தாள். அவன் வெளியே போகுமுன், அவனைச் சந்தித்து ஒருவார்த்தை பேசவேண்டுமென்று அவள் துடித்துக் கொண்டிருந்தாள். அவனைக் கண் டதும், அவளுக்கும் அழுகை வந்துவிட்டது. கண் ணீரை வடியவிட்டுக்கொண்டு, தழுதழுத்த குரலில் அவள் பேசினாள். டாம் உன்னை விட்டுவிட மாட்டோம் போகிற இடங்களை யெல்லாம் விசாரித்துத் தெரிந்துகொள்வோம். விரைவிலே, கையில் பணம் சேர்ந்தவுடன், உன்னை மறுபடி விலைக்கு வாங் கிக் கொண்டுவந்து விடுவோம். நீ இதை நம்பு ! உன்னைப் பிரிவது தாங்க முடியாத வேதனையாக இருக்கிறது. உனக்குக் கைகிறையப் பணம் கொடுத் தனுப்ப வேண்டுமென்று கொண்டுவந்திருக்கிறேன். ஆனால் பணம் முழுவதையும் வியாபாரி பிடுங்கிக்

33