பக்கம்:நீகிரோ மாமா-மொழிபெயர்ப்பு.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிரிந்து செல்லும்பொழுது, தான் அதைத் தாங்க முடியாதென்று எண்ணி, அவர் அன்று அதிகாலையி லேயே குதிரைமீது ஏறி, வெளியே எங்கோ போய் விட்டார். டாமுக்கு ஒரே ஒரு வருத்தம்தான் இருந் தது. யசனமானருடைய மகன் ஜியார்ஜ் ஊரிலில்லை. அவனிடம் விடை பெருமல் போகவேண்டி யிருக் கிறதே ' என்று அவன் குளோவிடம் சொன்னன். டாம் வண்டியில் ஏறி அமர்ந்துகொண்டான். உடனே ஹேலி நீண்ட சங்கிலி விலங்கை எடுத்து அவன் கால்களில் மாட்டுவதற்காகச் சென்ருன். அப் பொழுது திருமதி ஷெல்பி, மனம் கலங்கி, உரக்கக் கடறினுள் : டாமுக்கா விலங்கு? வேண்டவே வேண் டாம் அவன் சத்தியத்திற்குக் கட்டுப்பட்டவன் ! ஒட மாட்டான் ! ஹேலி சிரித்துக்கொண்டே, இனி நான் ஏமாற மாட்டேன்! இதே இடத்தில் ஒரு பெண்ணினல் எனக்கு ஐந்நூறு டாலர் கஷ்டமாகிவிட்டது ' என்று கூறிவிட்டு, டாமின் கால்களில் விலங்கை மாட்டிவிட் டான். பின்னர் அவன் வண்டியின் முன்பக்கம் ஏறி அமர்ந்துகொண்டு குதிரையைத் தட்டிவிட்டான். டாம், வண்டியினுள்ளே இருந்துகொண்டு, தன் குடும் பத்தாரைக் கண்கொட்டாமல் பார்த்துக்கொண்டே சென்ருன். சிறிது நேரத்தில் ஷெல்பி பிரபுவின் பண்ணை கண்ணுக்குத் தெரியாமல் மறைந்து விட்டது. வழியில் டாமும் ஹேலியும் மெளனமாகவேயிருங் தனர். ஒரு மைல் தூரம் சென்றபின், ஓர் இரும்புப் பட்டறை முன்பு ஹேலி வண்டியை கிறுத்திக் கீழே இறங்கினன். அந்தக் கடைக்குள்ளேயிருந்த கருமா 30