பக்கம்:நீகிரோ மாமா-மொழிபெயர்ப்பு.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சென்றுவிட்டான் என்று கேள்விப்பட்டு, அவனைத் தொடர்ந்துவந்து, அவன் கண்டுபிடித்துவிட்டான் !


'ஜியார்ஜ் யசமான் ! உங்களைப் பார்க்காமல் வந்ததுதான் எனக்கு வருத்தம். இப்பொழுது அதுவும் தீர்ந்துவிட்டது!’ என்று கூறி, டாமும் அவனை ஆவலுடன் கட்டிக்கொண்டான்.

ஜியார்ஜ், 'டாம் மாமா, உனக்காக ஒரு வெள்ளி டாலர் கொண்டு வந்திருக்கிறேன்!' என்றான்.

'அதையெல்லாம் நான் வைத்துக்கொள்ள என்னை விடமாட்டார்கள் ; வேண்டாம் யசமான் !’

'இந்த டாலரில் தமர் போட்டு ஒரு நூலும் கோத் திருக்கிறேன். இது உன் கழுத்தில் எப்பொழுதும் இருக்கட்டும். இதற்கு மேலே உன் சட்டையை மறைத் துப் போட்டுக்கொள். டாலரைப் பார்க்கும்போதெல்லாம் நீ என்னை நினைத்துக்கொள்ள வேண்டும் !'

ஜியார்ஜ் தன் கையாலேயே டாலரை அவன் கழுத்தில் கட்டினன். மாமா நான் சிறு பையன். எனக்கு வயதாகி, நான் பெரிய மனிதனுயிருந்தால், இப்படி உன்னை விற்கும்படி நேர்ந்திருக்காது. இது மகா கேவலம்! ஆயினும் வெகு சீக்கிரத்திலே பணம் சேர்த்துக்கொண்டு உன்னை மீட்க வருகிறேன். உன்னே நான் மீண்டும் வாங்கி வருவது நிச்சயம்! இது சத்தியம் ! என்றும் அவன் கூறினான்.

டாம் இறுதியாக அவனுக்குச் சொல்லவேண் டிய சில புத்திமதிகளைச் சொன்னன். எது கிடைத்தா லும், தாய் மட்டும் கிடைக்கமாட்டாள், ஜியார்ஜ் நீ தாய் சொல் தவருமல் நடக்கவேண்டும். என் அருமை ஜியார்ஜ் உயர்ந்த கனவானுயிருக்கிருன் என்று நான் கேள்விப்பட வேண்டும்!'