பக்கம்:நீகிரோ மாமா-மொழிபெயர்ப்பு.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

'அப்படியே நடப்பேன், மாமா!' என்று உறுதி சொல்லி விடைபெற்றுக்கொண்டு, ஜியார்ஜ் மீண்டும் தன் குதிரைமீது ஏறிக்கொண்டான். அப்பொழுது கடைக்குள்ளேயிருந்த ஹேலியைக் குத்தித் தள்ள வேண்டுமென்று அவன் எண்ணிக்கொண்டே திரும் பிச் சென்றான். கடவுள் உன்னை ஆசீர்வதிப்பார் !’ என்று டாம் அவனை வாழ்த்தினன். குதிரை மறையும் வரை அவன் அந்தத் திசையையே பார்த்துக்கொண்டிருந்தான்.

ஹேலி மீண்டும் வண்டிக்கு வந்து குதிரையை ஓட்டத் தொடங்கினான். இடையிடையே, அவன் தன் சட்டைப்பையில் வைத்திருந்த பத்திரிகையிலிருந்த விளம்பரங்களைப் பார்த்துவந்தான். அடிமைச் சந்தை களில் எங்கெங்கு மேற்கொண்டு சில அடிமைகளை விலைக்கு வாங்கலாம் என்பதற்காகவே அவன் பத்திரி கையைப் புரட்டிக்கொண்டிருந்தான்.

'ஐயா, என்னை எங்கே அழைத்துச் செல்லப் போகிறீர்கள்?’ என்று டாம் கேட்டான்.

‘மேலும் சில நீகிரோக்கள் விலைக்கு வந்திருப்ப தாய்த் தெரிகிறது. வாஷிங்டன் முதலான சில இடங் களில் பெருவாரியாக அடிமைகளை வாங்கலாம். உன்னோடு அவர்களையும் சேர்த்து தெற்கே நியூஆர்லியன் எலில் கொண்டுபோய் விற்க வேண்டுமென்று எண்ணி யிருக்கிறேன். இன்னும் சில நாட்களில் நாம் கப்ப லேறி மிஸிஸிப்பி ஆற்றின் வழியாகச் செல்லவேண்டும் ' என்று ஹேலி தெரிவித்தான்.