பக்கம்:நீகிரோ மாமா-மொழிபெயர்ப்பு.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

'எது கிடைத்தாலும் செய்ய வேண்டியதுதான். அந்தப் பெரிய நாட்டிலே எனக்கு ஒரு வேலை கிடைக்காமலா போகும்?'

அந்த நேரத்தில் சிமியோன் உள்ளே வந்தார். அவர் நெடிய உருவமுள்ளவர். அவருடைய நீண்ட தாடியும் ஒளி மிகுந்த முகமும் சூதுவாதற்ற அவரு டைய உள்ளத்தை எடுத்துக் காட்டின. அவர் நீண்ட அங்கியும் அகன்ற தொப்பியும் அணிந்திருங்தார்.

அவரைக் கண்டதும் ராக்கேல், என்ன செய்தி? என்று கேட்டாள்.

'செய்தியெல்லாம் நல்ல செய்திதான்!” என்று சொல்லிவிட்டு, அவர் எலிஸாவைப் பார்த்து, உன் கணவனின் பெயர் ஹாரிஸ் என்றுதானே சொல்லி யிருந்தாய்?" என்று கேட்டார்.

எலிஸாவுக்கு அச்சமுண்டாகி விட்டது. அவள் நடுங்கிக்கொண்டே, "ஆம்" என்ருள். சிமியோன், ‘சரிதான்! உனக்கு ஒரு கல்ல செய்தியைக் கொண்டு வந்திருக்கிறேன்! உன் கணவன் தப்பியோடி வந்து விட்டான். இங்கே பக்கத்து ஊர் ஒன்றில் அவன் இருக்கிருன். இன்றிரவு என் நண்பர்கள் அவனை இங்கே அழைத்து வருவார்கள்!” என்றார்.

அந்த நல்ல செய்தியைக் கேட்டவுடனேயே எலிஸா அளவில்லாத மகிழ்ச்சி யடைந்தாள். திடீரென்று அவளுக்கு மயக்கமுண்டாயிற்று. ராக்கேலும் அவள் கணவரும், அவளே மெதுவாகத் தூக்கி ஒரு கட்டிலில் படுக்க வைத்தனர். பல நாட்களாக உறக்கம் இல்லாதிருந்த எலிஸா கெடிய உறக்கத்தில் ஆழ்ந்திருந்தாள். தூங்கும்பொழுதும், அவள் கான 40