பக்கம்:நீகிரோ மாமா-மொழிபெயர்ப்பு.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

டாவைப் பற்றியே இன்பக் கனவுகள் கண்டு கொண்டிருந்தாள்.

குறித்தபடி அன்றிரவு ஹாரிஸ் அங்கே வந்து சேர்ந்தான். அவன் உள்ளே வந்ததும், பையன் ஹாரியைத் துரக்கி வைத்துக்கொண்டு, கட்டிலருகில் சென்று, எலிஸாவைத் தட்டி எழுப்பினன். ஒவ்வொரு கணமும் அவள் அவனுடைய வரவை எதிர்பார்த்துக் கொண்டிருந்ததால், அவள் உடனே எழுந்து திரும் பிப் பார்த்தாள். எதிரே அவளுடைய கணவன் நின்று கொண்டிருந்தான்! அவளுடைய கனவு எப்படியோ கனவாகிவிட்டது! சிறிது நேரத்திற்குப் பின் சிமியோன் அங்கு வங்து அவர்களுடன் பேசிக் கொண்டிருந்தார். அவ ருடைய பேச்சிலிருந்து அடிமைகளுக்கு அடைக்கலம் அளிப்பதால் அவருக்கு எத்தனையோ துயரங்கள் ஏற்ப்படுமென்று தெரிந்தது.

‘எங்களால் நீங்கள் அபராதம் கட்டவேண்டி யிருக்குமோ?' என்று கேட்டான் ஹாரிஸ்.

"ஆம், அபராதம் விதித்தால், கட்டிவிடுவேன். சிறைத் தண்டனை விதித்தால், சிறைக்கும் போகத் தயாராயிருக்கிறேன். இல்லாவிட்டால், ஏழைகளுக்கு எப்படி உதவி செய்ய முடியும்? ஒரு பாவமும் அறியாத காங்கள கஷ்டப்பட்டால்தான், அடிமைகளாகிய உங்களுக்கு நன்மை உண்டாகும்!' என்று அவர் கூறினார்.

"எங்களிடம் இரக்கம் கொண்டு நீங்கள் இவ்வளவு தியாகம் செய்கிறீர்களே! என்று ஹாரிஸ் வியந்து பேசினான்.

'கடவுளுக்காகவும் மனிதனுக்காகவும் உழைக் 41