பக்கம்:நீகிரோ மாமா-மொழிபெயர்ப்பு.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கவே நாங்கள் பிறந்திருக்கிறோம். கடமையைச் செய்வதில் கஷ்டங்கள் வந்தால், தாங்கிக்கொள்ள வேண்டும்.’

‘எப்படியும் நாங்கள் இந்த இடத்தைவிட்டு விரை வில் வெளியேறினால்தான் நல்லது' என்றான் ஹாரிஸ்.

'இன்றும் நாளைப் பகலிலும் நீங்கள் இங்கேதான் இருக்கவேண்டும். நாளை இரவில் நண்பர்கள் வந்து உங்களை அழைத்துப் போவார்கள். கானடாவிலும் எங்களுக்கு வேண்டியவர்கள் இருக்கிருர்கள். அவர் கள் உங்களுக்கு உதவி செய்வார்கள்’ என்று கிழவர் ஆறுதல் சொன்னர்.

மறுகான் காலை ஹாரிஸுக்கும் அவன் குடும்பத் தாருக்கும் விருந்து அளிக்கப்பட்டது. எலிஸாவும் ஹாரியும் உற்சாகமா யிருந்தனர். எலிஸா ஆண்டவ அனுடைய கருணையை எண்ணிப் பிரார்த்தனை செய்து கொண்டிருந்தாள்.

அவர்கள் இருந்த இடத்தை எப்படியோ எதிரிகள் தெரிந்துகொண்டு விட்டார்கள் என்றும், இரவிலே அவர்கள் புறப்பட்டுவிட வேண்டுமென்றும் சிமியோன் தெரிவித்தார்.

இரவில் இரண்டு குதிரைகள் பூட்டிய பெரிய வண்டியொன்று வந்து சேர்ந்தது. அதிலிருந்து பிளெச்சர் என்பவன் இறங்கி வந்து, சிமியோனைக் கண்டு பேசினன். ஹேலியின் ஆட்களைத்தான் கிரா மத்திலே சந்தித்ததாகவும், அவர்கள் இரவில் தங்க ளைத் தொடர்ந்து பிடிக்கவருவார்கள் என்றும் அவன். தெரிவித்தான். ஆகவே முன்கூட்டியே புறப்பட வேண்டுமென்று சிமியோன் ஏற்பாடு செய்தார்.

42

42