பக்கம்:நீகிரோ மாமா-மொழிபெயர்ப்பு.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

எலிஸாவுக்கு என்ன செய்வதென்று விளங்கவில்லை. தாங்கள் கானடாவுக்குச் செல்லுமுன்னுல் அபாயம் வந்துவிட்டதே என்று அவள் வருந்தினுள். அவளும் ஹாரியும் கண்பர்களிடம் விடைபெற் றுக்கொண்டு முதலில் வண்டியிலேறிஞர்கள். பிளெச் சர் கோச்சுப் பெட்டியில் ஏறி அமர்ந்துகொண்டான். ஹாரிஸ், தனது துப்பாக்கியை எடுத்துக் கையில் வைத்துக்கொண்டு, வண்டியின் பின்புறம் ஏறி நின்று கொண்டான். 'நண்பர்களே, சேமமாகப் போய்வாருங்கள்!' என்றுகூறி சிமியோன் வழியனுப்பினர். வண்டி புறப் பட்டு வேகமாகச் சென்றது. - வழியில் ஹாரிஸ் பின்புறம் கவனித்துக்கொண்டே' யிருந்தான். வெகுநேரம் வரை எவரும் தொடர்ந்து வரவில்லை. வண்டியினுள் ஹாரி நன்ருகத் துங்கிவிட் டான். எலிஸாவும் சாய்ந்து ஓய்வெடுத்துக் கொண் டிருந்தாள். காலை மூன்று மணிக்கு, பிளெச்சருக்கு வேண்டிய ஒரு நண்பன் குதிரைமீது வேகமாக வந்துகொண் டிருந்தான். அவன் வண்டியருகே சென்று, ஏழு, அல்லது எட்டு எதிரிகளுக்குமேல் குதிரைகளில் வரு வதாயும், வண்டியை வேகமாக ஒட்டும்படியும் கூறிச் சென்ருன். பிளெச்சர் சவுக்கால் குதிரைகளை மாறி மாறி அடித்து விரட்டினன். அவைகளும் அளவு கடந்த வேகத்தில் ஓடிக்கொண்டிருந்தன. எலிஸாவை எப்படியாவது பிடித்துவிட வேண்டு மென்று ஹேலி ஓர் ஏற்பாடு செய்திருந்தான். ஓடிச் செல்லும் நீகிரோக்களைப் பிடிப்பதற்கென்றே ஒரு கூட் டம் இருந்தது. ஹேஜி அக்கடட்டத்தின் தலைவனை

43

43