பக்கம்:நீகிரோ மாமா-மொழிபெயர்ப்பு.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கையிலே துப்பாக்கியை வைத்துக்கொண்டு, கீழே உற்றுப் பார்த்தான். எதிரிகள் வந்துவிட்டனர். அவர் கள் குதிரைகளை விட்டிறங்கி, பாறையை நோக்கி நடந்து வந்துகொண்டிருந்தனர். அப்பொழுது ஹாரிஸ் அவர்களைப் பார்த்து, நீங்கள் யார்? எதற்காக வந்திருக்கிறீர்கள் ? என்று கேட்டான். இரண்டு கிேரோவர்களையும், ஒரு குழந்தையை யும் பிடிப்பதற்காக காங்கள் வந்திருக்கிருேம். தோனே ஹாரிஸ் என்பவன்? ஒய்யாரமாக உயரே நிற்கிருயோ?” என்று பதில் கூறிஞன் டாம் லோக்கர் என்பவன். ‘ஆமடா, கான்தான் ஹாரிஸ்! என்னை நீங்கள் என்ன செய்யமுடியும்? இப்பொழுது நான் சுதந்தர மனிதன். உங்களில் எவளுவது மேலே ஏறிவந்தால், சுட்டுத் தள்ளிவிடுவேன் !' என்று ஆவேசத்துடன் பேசிளுன் ஹாரிஸ். லோக்கர் அவனை நோக்கி ஒருமுறை சுட்டான். ஆளுல் குறி தவறிவிட்டது. உடனே ஹாரிஸ்-ம் திருப்பிச் சுட்டான். லோக்களின் உடலில் குண்டு பாய்ந்து உதிரம் ஒழுகிக்கொண்டிருந்தது. அத்து டனே அவன் பாறையின்மீது ஏறி வந்தான். ஹாரிஸ் அவனை ஒரு காலால் எற்றித் தள்ளிஞன். லோக்கர் அலறிக்கொண்டு, கற்களின்மீது உருண்டு, தரை யிலே வந்து வீழ்ந்தான். இதைக் கண்ட மற்ற எதிரி கள், மேற்கொண்டு அங்கு நிற்பது அபாயம் என்று கருதி, தங்கள் குதிரைகளில் ஏறிக்கொண்டு பறந்து போய்விட்டனர். அவர்களில் ஒருவன்கூடத் தலாய யிலே வீழ்ந்து கிடந்த தங்கள் கண்டன் லோக்கரை தி. திரும்பிக்ககூடப் பார்க்கவில்லை !

4 M

45