பக்கம்:நீகிரோ மாமா-மொழிபெயர்ப்பு.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

களிலே இன்னும் அடிமை முறை போகவில்லையே ' என்று கூறினர் தந்தை. அவர் கல்ல இதயம் படைத்தவர்; மிகுந்த செல்வ முள்ளவர்; பார்வைக்கு அழகாகவும் இருந்தார். அவர் பெயர் அகஸ்டின். அவருக்குப் பக்கத்தில் அமர்க் திருந்த ஸ்திரீ அவருடைய மாமன் மகள் ஒபீலியா. ஊரிலே அவருடைய மனைவிக்கு உடல் நலமில்லாத தால், அவர் இவளை உதவிக்காக அழைத்துச் சென் ருர். அவர் மனைவி பெரும்பாலும் சோம்பேறியாகவே காலங் கழித்துவந்தாள். ஆளுல் உயர்ந்த ஆடை களும் அணிகளும் அணிந்துகொள்வதில் அவளுக்கு ஆர்வம் அதிகம். குணத்திலும் அவள் சிறந்தவ ளில்லை. அவர்களுடைய மாளிகையிலிருந்த பல அடிமைகளையும் அவள் கொடுமையாகவே நடத்தி வந்தாள். தான் பெற்ற ஒரே பெண் குழந்தையிடமும் அவளுக்குப் பொருமை இருந்துவந்தது. ஆகவே முக் கியமாகத் தன் குழந்தையைக் கவனித்துக்கொள் ளவே அகஸ்டின் ஒபீலியாவை அழைத்து வந்திருங் தார். சில சமயங்களில் அகஸ்டினின் குமாரி எவாஞ் சலின் டாம் இருந்த இடத்திற்குச் சென்று விளையாடு வாள். ஒரு சமயம் அவளுடைய பங்தைக் காண வில்லை. டாம் அதைத் தேடி எடுத்துக் கொடுத்தான். பல தடவைகளில் அவள், மிட்டாய்களும் ஆரஞ்சுப் பழங்களும் கொண்டுவந்து, நிகரோவர்களுக்குக் கொடுப்பாள். எல்லோருக்கும் அவளிடத்தில் தனிப் பட்ட ஒரு பிரியம் இருந்து வந்தது. அவள் தன் அருகில் வந்த சமயம் டாம், 'அம்மா, உன் பெயர் என்ன' என்று கேட்டான். 'என் பெயர்

4 H

48