பக்கம்:நீகிரோ மாமா-மொழிபெயர்ப்பு.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

 முன்னுரை

            இந்த நூல் உலகத்தை ஆட்டிவைத்த பத்துப் தினைந்து நூல்களுள் ஒன்று என்று அறிஞர்களால் பாற்றப்படுகின்றது. இது 1852-ம் ஆண்டில் முதன் முதல் அமெரிக்காவில் ஆங்கிலத்தில் வெளிவந்தது. உடனே 23 மொழிகளில் இது மொழிபெயர்க்கப்பட்டது. பின்னல் இது முக்கியமான உலக மொழிகள் அனைத்திலும் வெளிவந்திருக்கிறது. சென்ற நூறு வருடங்களுக்கு மேலாக இந்தக் கதையின் பெருமையம் புகழும் நாளுக்குநாள் அதிகரித்து வருகின் இரனவேயன்றிக் குறையவே இல்லை.
             ஒரு நூல் உலகத்தை ஆட்டிவைக்க முடியுமா ? ஆம். இந்த நூல் உலக நிலையை மாற்றுவதற்கு மிகவும் 'வசில செய்திருக்கின்றது.
              இந்த கதை உள்ளத்தை உருக்கும் மிகச் சிறந்த கதை , அமெரிக்காவிலிருந்த அடிமை நீகிரேவர்களைப்பற்றி இது சித்திரித்து காட்டுகின்றது.இது வெளிவந்ததால்,அமெரிக்க ஐக்கிய மாகாணத்தில், அடிமைகளாக வைத்துக்கொள்ளும் முறை மாறுவதற்கும் தீவிரமான ஏற்பாடுகள் தோன்றின. அங்கே வடபகுதியிலிருந்த மக்கள் அடிமை முறையை வெறுத்தனர்: தென்பகுதியிலிருந்த