பக்கம்:நீகிரோ மாமா-மொழிபெயர்ப்பு.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

மேரி, அவளுக்குப் பட்டுப் பாவாடை, சட்டை முதலி யவைகளே அணிவித்தாள். வீட்டிலிருந்த வைர நகை களையும் பூட்டி, அவளே அலங்காரம் செய்தாள். ஆனல் சிறிது நேரத்திற்குள், ஈவா அடிமைகள் இருக் கும் இடத்திற்குப் போய்விட்டாள். அங்கே அவள் மம்மி என்ற வேலைக்காரியைக் கண்டாள். அந்த வேலைக்காரிதான், இரவு முழுவதும் விழித்திருந்து, யசமானியைக் கவனிப்பவள். பல நாட்களாகத் தொடர்ந்து விழித்திருந்ததால், அவள் தனக்குத் தலைவலி அதிகமாக இருப்பதாகச் சொன்னுள். அப் பொழுது ஈவா தன்னிடம் இருந்த தங்க டப்பி யொன்றை அவளிடம் கொடுத்தாள். இதிலிருக்கும் மருங்தை அடிக்கடி முகர்ந்து பார்த்தால், தலைவலி போய்விடும்’ என்று அவள் சொன்னள். விலையுயர்ந்த அந்த டப்பியைத் தொடுவதற்குக்கட்ட மம்மி அஞ்சி ள்ை. எனக்கு இது வேண்டவே வேண்டாம்” என்று அவள் மறுத்தாள். ஆளுல் ஈவா விடுவதாயில்லை. டப்பியை அவள் கைகளிலே திணித்துவிட்டு, அவள் தன் தாயிடம் சென்னள். அவளைக் கண்டதும், மேரி அவளைக் கண்டித்துப் பேசினள். ஓயாமல் அடிமைகளிடம் நெருங்கக் கூடா தென்று கூறினள். பேச்சின் நடுவே, தங்க டப்பி எங்கேயென்று அவள் கேட்டாள். மம்மிக்கு அதிகத் தலைவலி. அவளுக்கு அதைக் கொடுத்திருக்கிறேன்! எனருள் ஈவா.

  • உடனே டோய் அதை வாங்கி வா ! அப்புறம் தான் நாம் கோயிலுக்குச் செல்லவேண்டும் !" என்று தாயார் கடிந்து பேசினள். அப்படியே ஈவா போய்: அதை வாங்கிவந்தாள்.

55

55