பக்கம்:நீகிரோ மாமா-மொழிபெயர்ப்பு.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

பொழுதெல்லாம், மேரி அதை நம்பவில்லை. எப்பொழு துமே மேரி, தன் நலத்தைத் தவிர, மற்றவர்களைப் பற்றிக கருத்தைச் செலுத்துவதே இல்லை. தனக்கு ஏதோ நோய்கள் இருப்பதாக அவள் எண்ணிக் கொண்டே யிருந்தாள். ஆனல் அவை என்ன நோய்கள் என்று அவளுக்கே தெரியாது. ஒருவேளை நோய்கள் இருப்பதாக அவள் கற்பனை செய்துகொண் டிருக்கலாம். ஈவாவைப் பற்றி ஒபீலியா அடிக்கடி தொந்தரவு செய்வதையே அவள் விரும்பவில்லை. நோய் அதிகமாகி, ஈவா கட்டிலில் படுக்கையிலே படுத்திருந்தாள். வைத்தியரும் அவளைப் பற்றி உறுதி சொல்ல முடியாதென்று தெரிவித்துவிட்டார். அப் பொழுதுதான் மேரி உண்மையான நிலேயை ஓரளவு தெரிந்துகொண்டாள். அகஸ்டின் பிரபு தன்னுடைய அருமை ஈவா தன்னைவிட்டு ஒரு நாளும் பிரியமாட் டாள் என்று எண்ணி வந்த நிலை மாறி அவரும் அதி கக் கவலை கொண்டார். ஒரு நாள் வேதத்தைப்பற்றி டாமிடம் பேசிக் கொண்டிருந்தபொழுது, கிறிஸ்துபெருமான் மற்றவர் களுக்காகத் தாம் ஏன் உயிர்விட விரும்பினர் என்பது எனக்குத் தெளிவாய்த் தெரிகிறது' என்று ஈவா சொன்னாள். எனக்கு ஒன்றும் விளங்கவில்லையே! நீ என்ன சொல்லுகிருய்?’ என்றான் டாம். ஈவா பேசலுற்றாள் : எனக்கும் மற்றவர்களுக் காக உயிரை அளிக்க வேண்டுமென்று ஆசை'ஏற்படு கிறது. அன்று கப்பலில் உன்னை முதன்முதலில் சந்தித்தபொழுது, உன்னுடன் எத்தனையோ அடிமை கள் இருந்தார்கள். தாய், தந்தை, கணவன், மனைவி, குழந்தைகள் ஆகியவர்களைப் பிரிந்து அடிமைகள்

6 ፭

62