பக்கம்:நீகிரோ மாமா-மொழிபெயர்ப்பு.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

வெளியிலே சிறிதுநேரம் உலாவிக்கொண்டிருப்பான். இரவில் அவன் ஈவாவின் அறைக்கு வெளியேயிருந்த வராக்தாவில்தான் படுத்திருப்பான். ஒரு சமயம் ஒபீலியா, நீ ஏன் இங்கே படுத்திருக்கிராய் ? உன் அறைக்குப் போவதில்லையா ?’ என்று அவனைக் கேட் டாள். அவன், எந்த நேரத்திலும் ஆண்டவர் ஈவாவை அழைத்துப்போக வருவார். அதைக் கவனிக் கவே கான் இங்கே விழித்திருக்கிறேன் ! என்று பதில் சொன்னான், அன்று ஈவாவுக்கு முகம் சற்றுத் தெளிவாயிருந் தது. ஆனல் நள்ளிரவில் நிலைமை மாறிவிட்டது. ஒபீலியா டாமை அழைத்து, உடனே போய் வைத்தி யரை அழைத்து வரும்படி சொன்னாள். அவனும் ஒடிச்சென்று அவரை அழைத்துவந்தான். அவர் மேற்கொண்டு எதுவும் செய்வதற் கில்லையென்று கையை விரித்துவிட்டார். அகஸ்டினும், மேரியும் அறைக்குள்ளே வந்திருந்தனர். அகஸ்டின் ஈவாவின் செவியருகே வாயை வைத்துக்கொண்டு, 'கண்ணே, என்னைத் தெரிகிறத?' என்று கேட்டார். ஈவா தன் நீலக் கண்களைத் திறந்து பார்த்து, "அப்பா' என்றாள். ஒரு கணநேரம் அவள் முகத்தில் புன்னகை படர்ந்திருந்தது. பின்பு அது வேதனையாக மாறியது. மகள் படும் துயரத்தைக் கண்டு தாங்க முடியாமல், அகஸ்டின் டாமின் கைகளைப் பிடித்துக் கொண்டு, டாம், என்னால் சகிக்க முடியவில்லையே' என்று கூறிக் கண்ணிர் பெருக்கினார். டாம் ஈவாவைத் திரும்பிப் பார்த்தான். அவள் கண்கள் மூடியிருந்தன. அன்பு, இன்பம், அமைதி' என்று முனகிக்கொண்டே, ஈவா கடைசியாகப் புலம்

II ||

69