பக்கம்:நீகிரோ மாமா-மொழிபெயர்ப்பு.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மேரி துக்கம் கொண்டாடுவதற்கு ஒரு கறுப்பு உடை தைக்க வேண்டுமென்று விரும்பினுள். நல்ல துணி யாக ஒன்றைத் தேர்ந்தெடுத்து, அதை விரைவிலே தைத்து வாங்கி வரவேண்டுமென்று அவள் வேலைக் காரியிடம் சொல்லி யனுப்பினுள். இதற்குப் பின்னர் ஒபீலியா அவளிடம் சென்று பேசத் தொடங்கிளுள். அப்பொழுது மேரி, வீட்டையும், காற்காலிகள், கட்டில்கள் முதலிய சாமான்களையும், அடிமைகளையும் ஏலத்தில் விற்றுவிடவேண்டுமென்று வக்கீல் சொல்லி யிருப்பதாகவும், வெளியூரிலிருந்த தன் மைத்துனரும் அப்படியே செய்யும்படி எழுதியிருப்பதாகவும் கூறி ளுள். அடுத்த வாரத்திலேயே தான் வீட்டைக் காலி செய்துவிட்டு, வெளியேறப் போவதாகவும் அவள் தெரிவித்தாள். ஒபீலியா தான் சொல்ல வேண்டிய விஷயத்தை மெதுவாகத் தொடங்கிளுள் : உன் கணவர் இறப்பு தற்கு முன்னல் டாமுக்கு விடுதலை அளிப்பதாகச் சொல்லியிருந்தார். அதற்காகப் பத்திரமும் எழுதச் சொல்லியிருந்தார். அந்த விஷயத்தை நீயும் கவ. னித்து, சட்ட பூர்வமாகச் செய்யவேண்டிய காரியங்! களை விரைவிலே செய்து முடித்தால் கலம்.” கான் அப்படி எதுவும் செய்யப் போவதில்லை. அடிமைகளிலே டாம்தான் தலைசிறந்தவன். அவனை விட்டுவிட்டால், மிகுந்த கஷ்டமுண்டாகும். அவனுமா விடுதலை கேட்கிருன்? இந்த அடிமைகள் எல்லோரும் விடுதலை விடுதலையென ஏன் கத்துகிருர்கள்? அடிமை களின் விமோசனம் பற்றிப் பேசுவதே எனக்குப்பிடிக்க வில்லை. அவர்களை ஒருநாளும் சுதந்தரமாக விடக் கூடாது! இவ்வாறு மேரி ஆத்திரத்தோடு பேசினள்.

7 5

75