பக்கம்:நீகிரோ மாமா-மொழிபெயர்ப்பு.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மட்டும் தானே காம் இருவரும் ஒன்ருக இருப்போம்! மா8ளச் சந்தையிலே உன்னை எவன் வாங்கப் போகி ானே, என்னை எவன் வாங்கப் போகிருனேரி என்று மகள் சொல்லி வேதனைப்பட்டாள். மறுநாள் காலை கிடங்கு முழுதும் தடபுடலாக எற்பாடுகள் கடந்துகொண்டிருந்தன. சங்தையில் விற்பதற்காக வியாபாரிகள் அடிமைகளைத் தயார் செய்து கொண்டிருந்தனர். அமெரிக்காவிலேயே கியூ ஆர்லியன்ஸில் கடந்த சந்தைதான் அடிமைச் சந்தைகளிலே மிகப் பெரியது. அங்கு அதிகாலையிலிருந்தே அடிமைகள் கூட்டம் கூட்டமாக வந்து குவிந்து கொண்டிருந்தனர். டாமும் அகஸ்டின் பிரபுவின் மற்ற அடிமைகளும் ஒரு பக்கத் தில் தனியாக நிறுத்தப்பட்டிருந்தனர். எமிலினும் அவளுடைய தாயும் வேருெரு பக்கத்தில் கடுங்கிக் கொண்டே கின்றனர். திடீரென்று குள்ளமான முரடன் ஒருவன் டாமிடம் வந்து, அவனை ஏற இறங்கப் பார்த்தான். மாடுகளைப் பார்ப்பதுபோல் அவனுடைய பற்களைப் பிடித்துப் பார்த்தான். சட்டையைக் கழற்றச் சொல்லி, அவன் உடலின் தசை நார்களைக் கவனித்தான். டாம்ைப் பற்றிய விவரங்களையும். அவன் கேட்டுத் தெரிந்து கொண்டான். ஏலம் தொடங்கிவிட்டது. டாமை அந்த முரடனே விலைக்கு வாங்கிளுன். எமிலினையும் அவனே வாங்கி ஞன். அவளுடைய தாயை வேருெரு பெரிய மனிதர் வாங்கிச் சென்ருர். விரைவிலே வியாபாரிகள் தாங்கள் வாங்கிய அடிமைகளைக் கூட்டம் கூட்டமாக கட்த்திக் கொண்டு சென்றனர். , - 78

== $o

78