பக்கம்:நீகிரோ மாமா-மொழிபெயர்ப்பு.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14. டாமின் புதிய யசமானன் மறுபடி டாம் ஒரு கப்பலில் பிரயாணம் செய்து கொண்டிருந்தான். அவனுடைய கைகளிலும் கால் களிலும் சங்கிலிகள் மாட்டப்பட்டிருந்தன. அவன் அமர்ந்திருந்த கப்பல் மிகவும் சிறியது. அந்தக் கப்ப லுக்குக் கொள்ளைக்காரன்' என்று பொருத்தமாகவே பெயர் வைக்கப்பட்டிருந்தது. டாமை விலைக்கு வாங்கிய முரடனின் பெயர் சைமன் லெகிரி. இந்த லெகிரியைப்போல் கொடுமை யானவரை அமெரிக்காவில் காண்பதே அரிது. டாமுடன் சேர்த்து அவன் எட்டு அடிமைகளை விலைக்கு வாங்கியிருந்தான். லெகிரி டாமின் பெட்டியைத் திறந்து பார்த்தான் அதில் அகஸ்டின் அளித்திருந்த கல்ல உடைகள் பல இருந்தன. அவற்றுடன், குதிரை லாயத்தில் வேலை செய்யும்போது டாம் அணியக்கூடிய பழைய உடை களும் இருந்தன. லெகிரி டாமின் விலங்குகளைக் கழற்றிவிட்டு, பழைய உடைகளை அணிந்துகொள் ளும்படி கடறினன். உடனே டாம், எழுந்து சென்று, தன் புதிய உடைகளைக் கழற்றிவிட்டு, பழையவற்றை அணிந்துகொண்டு, திரும்பிவந்தான். அவனுடைய கால்சட்டைப் பையில் சிறு வேதப்புத்தகம் ஒன்றை அவன் கினைவோடு எடுத்து வைத்துக்கொண்டிருங் தான். ஆளுல் பெட்டியில் தோத்திர கீதங்கள் அடங் கிய நூல் ஒன்றிருந்தது. லெகிரி பெட்டி முழுவதை :யும் சோதினே செய்தான். அதில் குழந்தை թր Յur

79;

79